பக்கம்:முல்லைக்கொடி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 169

நெஞ்சு ஏவல் செய்யாது என் நின்றாய்க்கு, எஞ்சிய காதல்கொள் காமம் கலக்குற, ஏதிலார் 20 பொய்ம்மொழி தேறுவது என்? தெளிந்தேன் தெரியிழாய்! யான் பல்கால் யாம் கான்யாற்று அவிர்மணல், தண்பொழில், அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி, முல்லை குருந்தொடுமுச்சி வேய்ந்து எல்லை 25 இரவுற்றது இன்னம் கழிப்பி; அரவுற்று உருமின் அதிரும் குரலபோல் பொருமுரண் நல்லேறு நாகுடன் நின்றன; பல்லான் இனநிரை நாம் உடன் செலற்கே.”

தலைவியை ஆற்றிடைக் கண்டு, விலக்கி, கூட்டத்திற்கு உடம்படுத்தும் தலைவன் கூறியது இது.

1. நந்திய - பெருகிய, நயவரு - விருப்பம் விளைக்கின்ற; 2. அலமரல் - மருண்டு நோக்கல், அமர் - விருப்பம்; உறீஇ - உற்றதனால்;3. உலமரல் - ஓயாது அலைக்கும்; உயவு - வருந்தும்; 4. பேரேமுற்றார் - பெரிதும் பித்து ஏறியவர்; 13, எல்லை - நாளை, 15. நீப்பார் - நெஞ்சால் உடன்படாதார்; கிளவி - சொல், மடம் பட்டு - அறிவிழந்து 20. அவள் மீது கொண்ட வெறுப்பால். தன்னை ஏதிலாள் எனவும், தன் சொல்லைப் பொய்ம்மொழி என்றும் கூறினாள். 21. என் - எவ்வாறு உண்டாகும்; 24. அகல் அறை - அகன்ற பாறை, அல்கல் - தங்குதல்; 28. நாகு - பெண் எருமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/171&oldid=708015" இலிருந்து மீள்விக்கப்பட்டது