பக்கம்:முல்லைக்கொடி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இரு மணம் இயல்பன்று

கானாற்று மணற்பரப்பில் மகளிர் சிலர் மணல்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அம்மகளிர் அக்காட்டாற்றிற்கு அணித்தாக இருந்த ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது இளைஞன் ஒருவன் ஆங்கு வந்தான்். வந்தவன், அம்மகளிருள் நனிமிக அழகு வாய்ந்த நங்கை ஒருத்தியைக் கண்டான்; காதல் கொண்டான்; அவள் அவ்வாயர்பாடித் தலைவன் மகள். தன் மணல் வீட்டிற்கு அருகே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனை அவளும் பார்த்தாள். ஒழுங்காக வாரி வரிந்து முடியப் பெற்று முதுகில் தாழ்ந்து கிடக்கும் தலைமயிர் முதலாக அவன் உறுப்பு நலங்கள் அனைத்தையும் ஒருமுறை ஊன்றி நோக்கினாள்; அழகின் திருவுருவாய்க் காட்சியளித்த அவனழகில் அவளும் மயங்கி விட்டாள். அன்று முதலாக அவர்கள் இருவரும், எவரும் அறியாவாறு எதிர்ப்பட்டு இன்புறத் தொடங்கினர். ஆனால் பலர் அறிய மணந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/172&oldid=708016" இலிருந்து மீள்விக்கப்பட்டது