பக்கம்:முல்லைக்கொடி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ↔ 171

கொண்டவர்போல், வெளிப்படையாக, விரும்பியபோ தெல்லாம் கலந்து பழக முடியவில்லை. மறைவாகப் பழகியதில் எத்தனையோ இடையூறுகளுக்கு உள்ளாயினர். அவள் அவனைக் காணவும் மாட்டாது பலநாள் வருந்தினாள். காதலனை ஒரு நாள் காணாதிருப்பதும் அவளால் இயலாது; அவ்வளவு பெரிது அவள் அன்பு; அத்தகைய பேரன்பு உடைய அவளால், அவனைப் பாராது, பல நாள் கழிப்பது பெருந்துன்பமாயிற்று, துயர் மிகுதியால் அவள் நலமும் கெட்டது.

மகளின் நலக்கேடு கண்டனர் பெற்றோர்; அது பருவக் கோளாறின் விளைவு எனப் பொதுவாக உணர்ந்தனர்; அதனால் அவளுக்குத் திருமணம் செய்யத் துணிந்தனர்; (பெற்றோர்க்குத் தன் காதலை உணர்த்த அவள் பெண்மை தடைசெய்து விட்டது; அதனால் அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்க்கு இல்லாதாயிற்று) அவள் காதலை அவர் அறியார்; ஆதலின், அவளுக்கு ஏற்ற மணமகனுக்காக எங்கெங்கோ சென்று அலைந்தனர். மணமகனுக்காக அலைந்து கொண்டிருக்கும் போதே திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் விரைந்து மேற் கொண்டனர்; மகளுக்கு நாள்தோறும் புதுமலர் சூட்டிப் புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர்; வீட்டைத் துப்புரவு செய்து செம்மண் பூசினர்; மனை முற்றத்தில் புதுமணல் பரப்பினர்; தம் குல வழக்கப்படி எருமைக் கோடு நட்டு இறைவனை வழிபடத் தொடங்கினர்.

காதலிக்குத் திருமணம் என்ற செய்தி கேட்டு

இளைஞன் வருந்தினான். வருந்தியவன், அவளுக்கும் தனக்கும் உள்ள காதலைத் தன் பெற்றோர்க்கு அறிவித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/173&oldid=708017" இலிருந்து மீள்விக்கப்பட்டது