பக்கம்:முல்லைக்கொடி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 争 புலவர் கா. கோவிந்தன்

அவளை மணம் பேசி வருமாறு அவள் பெற்றோரிடத்தில் அவரை அனுப்பும் அத்துணைத் துணிவு பெற்றானில்லை. அதனால் காதலிக்கு மண ஏற்பாடு நிகழக்கண்டு வருந்துவ தல்லது, அதைத் தடுத்து, அவளைத் தான்ே மணந்து கொள்வதை அவனால் செய்ய முடியவில்லை. -

பெற்றோரின் மண முயற்சி, காதலை வெளியிடா வாறு தடுக்கும் தன் பெண்மை, தம் காதலை வெளிப் படுத்தித் தன்னை மணந்து கொள்ளும் வாய்ப்புடைய அவன் வாளா இருத்தல் ஆகிய இவை அனைத்தையும் எண்ணி எண்ணி வருந்தினாள் அப்பெண். இறுதியில், இவ்வாறு தான்ும் வருந்தி வாளாயிருந்துவிடின், தன் கற்பு கெடுமாதலின், தன் திருமணத்திற்குத் தான்ே வழி காணுதல் வேண்டும் எனத் துணிந்தாள். தன் காதலைத் தன் பெற்றோர்க்கு அறிவிப்பதால் பயனில்லை; காதலின் மென்மை அறியாத அவர்கள், அஃதறிந்து சினம் கொண்டு, செய்வதறியாது தன்னைப் பிறன் ஒருவனுக்கு வலிய மணம் செய்து தரவும் துணிந்து விடுவர். காதல் உண்மையாயின், மணம் பேசி அவனே வருக என வாளா இருந்து விடினும் விடுவர். ஆகவே, அவருக்குக் கூறுவது கூடாது; பெற்றோர்க்கு அஞ்சி வாய்மூடிக் கிடப்பதால் ஒரு பெண்ணின் வாழ்வு பாழாம் என்பதை அவனுக்கு அறிவித்து, அவன் உள்ளத்தில் ஊக்கம் ஊட்டின், அவன் துணிந்து மணமுயற்சி மேற்கொள்வன் என நம்பினாள்.

தோழியை அழைத்தாள். அவள்பால் தன் நிலை கூறி அழுவிட்டு, "தோழி! வருந்தாது வாய்மூடிக் கிடப்பின், பெற்றோர் என்னை வேறு ஒருவனுக்கு வரைவு நேர்ந்து விடுவர்! அறநெறியில் பிறழா ஆயர்குடியில் பிறந்தவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/174&oldid=708018" இலிருந்து மீள்விக்கப்பட்டது