பக்கம்:முல்லைக்கொடி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 173

நான். ஆயர் மகளிர் மறுமணம் செய்து கொள்ளார்; ஒருவனைக் காதலித்த பின்னர், பரந்த கடல் சூழ்ந்த இப்பெரிய உலகமே வந்து வாய்க்கினும், அவர் மனம் பிறன் ஒருவனைக் காதலிக்காது; இரு மணம் ஆயர் குடிக்கு இயல்பன்று; அது அவர்க்கு இழுக்குத் தரும்; அக்குடியில் பிறந்தவள் நான்; அவனை அன்று கானாற்றங்கரையில் கண்டு காதல் கொண்ட போதே, நான் அவனுக்கு உரியவளாகி விட்டேன்; இனி அயலான் ஒருவனை மணப்பது இயலாது; இதையெல்லாம் மறந்து, நடப்பது நடக்கட்டும் எனத் துணிந்து இருப்பது இயலாது; ஆகவே, தோழி! அவ்விளைஞனைக் கண்டு, ஏடா! உன் காதலியின் திருமணம் நீ இல்லாமலே நடைபெறப் போகிறது. அவள் உன்னை விட்டு வேறு ஒருவனுக்கு உரிமையாகப் போகிறாள்; அதைத் தடுத்து, அவளை உனக்கு உரிமையாக்கிக் கொள்ளும் நினைப்பு அற்று நிற்கின்றாய் நீ அறிவிழந்து நிற்கும் நின் நிலை கண்டு இரங்குகிறது என் நெஞ்சம்; தலை மயிரைக் கோதி முடித்து, முதுகில் வீழுமாறு கோலம் செய்து கொண்டு, பெண்களைக் கண்டு காதல் கொள்ளக் கற்றுக் கொண்ட நீ, அக்காதலை உன் பெற்றோர்க்கு உணர்த்த அஞ்சி அடங்கிக் கிடக்கின்றனை, உன் ஆண்மையின் அழகே அழகு ! என இடித்துக் கூறி எள்ளி நகையாடியும், நீ அவள் பால் கொண்டுள்ள காதலை உன் பெற்றோர்க்கு உணர்த்தி, அவளை மணம் பேசி வருமாறு அவரை அனுப்பும். அறிவிழந்து நிற்கும் நின் பேதைமையின் விளைவால், அவள் திருமணம் உன்னை விட்டு அகலும்; அதுவும் விரைவில் அகன்று விடும்; அவள் திருமணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/175&oldid=708019" இலிருந்து மீள்விக்கப்பட்டது