பக்கம்:முல்லைக்கொடி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ↔ புலவர் கா. கோவிந்தன்

பிறன் ஒருவனோடு நடைபெறாது, அது உன்னோடு நடை பெறுதற்காம் வழிவகைகளை இப்பொழுதே மேற்கொள் வாயாக!' என அவன் உள்ளம் துணிவு கொள்ளுமாறு அறிவூட்டி வருவாயாக தோழி, நீ இப்பொழுது கூறப் போகும் அறிவுரை, பண்டு ஒருமுறை, வரைந்து கொள்ளு மாறு அவனுக்குக் கூறிய அறிவுரையைப் போலவே பயனற்றுப் போய்விடப் போகிறது. அவ்வாறு ஆகாமல், கேட்கும் அவன், இன்றியமையாக் கடமை அது எனக் கொண்டு, அதை அன்றே மேற்கொள்ளும் வகையில், அவன் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு அறிவுறுத்தி வருவாயாக!” எனக் கூறி அனுப்பினாள்.

"வாரி நெறிப்பட்டு இரும்புறம் தாஅழ்ந்த ஒரிப்புதல்வன் அழுதனன் என்பவோ? புதுவமலர் தைஇ, எமர் என்பெயரால் வதுவை அயர்வாரைக்கண்டும், மதியறியா ஏழையை என்று அகலநக்கு வந்தீயாய் நீ, 5 தோழி! அவனுழைச் சென்று;

சென்று யான் அறிவேன்; கூறுக மற்று இனி; சொல் அறியாப் பேதை மடவை! மற்று எல்லா! நினக்கு ஒருஉம் மற்று என்று அகல், அகலும் நீடின்று;

நினக்கு வருவதாக் காண்பாய்; அனைத்து ஆகச் 10 சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு;

தருமணல் தாழப் பெய்து, இல்யூவல் ஊட்டி, எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும் பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/176&oldid=708020" இலிருந்து மீள்விக்கப்பட்டது