பக்கம்:முல்லைக்கொடி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இ. புலவர் கா. கோவிந்தன்

தந்தையும், தமையன்மாரும் இரவு பகலாகக் கூடிப் பேசியதெல்லாம் உன் திருமணப் பேச்சே! ஆகவே, அஞ்சுவது விடுத்து வந்து அவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டு களிப்பாயாக!” எனக் கூறிக் கூட்டிச் சென்றாள்.

"தோழி! நாம் காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக் கரந்தது உம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம் புல்லினத்து ஆயமகன் சூடி வந்ததோர் முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5 கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழியாய்! வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண அன்னைமுன் வீழ்ந்தன்று அப்பூர்

அதனை, வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள் 10 நெருப்புக்கை தொட்டவர்போல விதிர்த்திட்டு நீங்கிப்புறங்கடைப் போயினாள்; யானும் என்

சாந்துளர் கூழைமுடியா, நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழிஇத், தளர்பு ஒல்கிப் பாங்கரும் கானத்து ஒளித்தேன்; அதற்கு எல்லா! 15

ஈங்கு எவன் அஞ்சுவது? அஞ்சல்! அவன்கண்ணி நீ புனைந்தாயாயின், நமரும் அவன்கண் அடைசூழ்ந்தார் நின்னை; அகன்கண் வரைப்பில் மணல்தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே, யாம் அல்கலும் சூழ்ந்த வினை." - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/182&oldid=708026" இலிருந்து மீள்விக்கப்பட்டது