பக்கம்:முல்லைக்கொடி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 183

கன்னிப் பருவம் கழிந்து, கடிமண்ப் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவள் உள்ளத்தில், காதல் உணர்ச்சி மெல்ல அரும்பீனத் தொடங்கியிருந்தது; அதற்குத் துணை புரிந்து அன்பு நீர் ஊற்றி வளர்க்க முன்வந்தான்் ஓர் இளைஞன். கன்றுகளை ஒட்டிச் செல்லும் போதும், கறவைக் கலங்களோடு செல்லும் போதும், இடைவழியில் நின்று, அவளைக் கண்டு மகிழ்வ தும், அவளை அணுகிப் பேச்செடுத்து அவள் சொல் கேட்டு இன்புறுவதும், அவன் வழக்கமாகி விட்டது. அதில் அவளும் பேரின்பம் கண்டாள். காதல் உணர்ச்சியோடு, தன் காதல் திருவிளையாட்டைத் தாய் கண்டு கொண் டால் கடிந்து கொள்வாள்; ஊரார் உணர்ந்தால் அலர் கூறிப் பழிப்பர் என்ற அச்சமும் அவள் உள்ளத்தில் ஒருபால் ஆட்சி செய்தது; அதனால் தன் காதலை அஞ்சி அஞ்சி வளர்த்து வந்தாள்.

இந்நிலையில், ஒருநாள், அவள் கன்றுகளை ஒட்டிக் கொண்டு புறப்பட்டாள். அவளை ஊர்க் கோடியிலேயே பார்த்துவிட்ட இளைஞன், அவள் கைப்பற்றிச் செல்லும் தாம்பின் ஒரு தலையைப் பற்றியவாறே, அவளைப் பின் தொடர்ந்தான்். பேசாமல் பின் தொடர்ந்து சென்றவன், காடும் மலையும் சூழ, இடையே எவரும் எளிதில் புகமாட்டா இடத்தில் இருந்த தோட்டத்திற்குள் அவள் புகுந்ததும், அவள் முன்னே புகுந்து, வழிமறித்து நிறத்தினான். பின் தொடர்ந்து வந்தவன், திடுமென முன் புகுந்து வழிமறித்தமையாலும், இந்நிலையை எவரேனும் கண்டு கொண்டால் தன் நிலை என்னாம் என எண்ணியதாலும் அஞ்சிவிட்டாள். "ஏடா! ஏது இவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/185&oldid=708029" இலிருந்து மீள்விக்கப்பட்டது