பக்கம்:முல்லைக்கொடி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இ. புலவர் கா. கோவிந்தன்

வந்து வழிமறித்து விட்டாய்? மனம் என்ன பித்தேறி மயக்கம் உற்றுவிட்டதோ? விலகி எனக்கு வழிவிடு!” எனப் படபடக்கக் கூறினாள்.

சினந்து நிற்கும் அவள் தோற்றம் கண்டு அவன் சிந்தை களித்தது; காதல் வெறி தலைக்கேறிற்று; அவள் மேனியைத் தழுவி மகிழும் ஆசை அவனைப் பற்றிக் கொண்டது; நெறி பிறழா நல்லோனாதலின், அவளிசைவு பெறாது அவளை அணைத்துக் கொள்வது பெரும் பிழையாம் என எண்ணினான்; அவளே விரும்பி வந்து தன்னைத் தழுவிக் கொள்ள மாட்டாளா எனப் பெரிதும் ஆசைப்பட்டான்; நற்பண்பு நிறைந்த அவனால் அதையும் வாய்விட்டுக் கூற இயலவில்லை. அதனால், வழிவிட்டு விலகு! என அவள் கூறியதும், "பெண்ணே! நான் வழி விடேன்; வீட்டை விட்டு, வெளியே வந்து நிற்கும் நீ, தன்னைப் பிடிக்க வருவாரை முட்டிக் கீழே தள்ளிவிட்டு மூர்க்கமாக ஒடி மறையும், கொடிய வலிமை வாய்ந்த பெண்ணெருமைக் கன்றுபோல், வழி மறித்து நிற்கும் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுச் செல்வாயாக!” எனக் கூறி அசையாது நின்றான்.

அவன் சொல்லும் செயலும் அவளுக்கு இன்ப மூட்டின. அந்நிலையிலேயே நிற்கவும், ஏன், அவன் விரும்புமாறு அவனைத் தழுவிக் கொள்ளவும் அவளும் விரும்பினாள். ஆனால் தாய் வந்து விடுவாளோ? பிறர் பார்த்து விடுவாரோ என்ற அச்சம் அவளை அலைக் கழித்தது. அதனால், "ஏடா! என்மீது பேரன்புடையவள் என் தாய்; எனக்குக் கேடு செய்ய எண்ணுவாரைக் கொடுமைக் குள்ளாக்கும் கடுமையுடையவள், துள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/186&oldid=708030" இலிருந்து மீள்விக்கப்பட்டது