பக்கம்:முல்லைக்கொடி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 185

விளையாடும் தன் கன்றைப் பற்றித் தளைப்பார் மீது பெருஞ்சினம் கொண்டு பாயும் கன்றின்ற பசுவைப் போல் என்னைத் தடுத்து நிற்பதைத் தாய் கண்டால் நின்னைப் பற்றித் துயர் செய்வள்; தாயின் சினம் உன் சிந்தையில் இருத்தல் நலம், ஆகவே, மேலும் வழிமறித்து நிற்காதே; விலகு!” என்றாள்.

தன்மீது அவளுக்கும் காதல் உளது; ஆனால் தன் களவுக் காதலை எவரேனும் அறிந்து கொள்வரோ என்று அஞ்சுகிறாள் என்பதை அவன் அறிந்து கொண்டான். தாயையும், ஊர்த் தலைவனையும் பற்றிய அச்சம் அவனை விட்டகன்றது; அதனால், "பெண்ணே ! உன் பேரன்பு கிட்டும் பேறு எனக்கு வாய்க்காது போய் விடுமோ என்றே யான் இதுகாறும் அஞ்சி வாழ்ந்தேன்; அதை இன்று அடைந்து விட்டேன்; அதைப் பெற்ற பின்னர், உன் அருட் பார்வை என் மீது வீழ்ந்து விட்ட பின்னர், இவ் வுலகில் எதற்கும் அஞ்சேன்; காதல் வெள்ளத்தில் களித்திருக்கும் இந்நிலையில் தாயே வரினும் தளரேன்; ஊரே திரண்டு வரினும், ஊர்த் தலைவனே வரினும் தளரேன்; அவரைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவையும் இனி இல்லை!" எனக் கூறிப் பல்லிளித்தான்்.

தாய் வருவள்; அவள் நனிமிகக் கொடியள் எனத் தான்் கூறியதை ஏற்றுக் கொள்ளாது, ஏற்று வழி விடக் கருதாது, பெருமழை பெய்யும் பொழுது, அம் மழையினின்றும் ஒடி ஒளியக் கருதாது, தலை சாய்த்து, மெல்ல அடியிட்டு நடந்து செல்லும் எருதுபோல், தன் முன் தலை வணங்கி நின்று, தான்் கூறும் ஒவ்வொன்றிற்கும் தடையாக வேறு சில கூறிக், காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/187&oldid=708031" இலிருந்து மீள்விக்கப்பட்டது