பக்கம்:முல்லைக்கொடி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இ. புலவர் கா. கோவிந்தன்

வெறியால் கருத்திழந்து, காதல் வெளியானால் உண்டாம் விளைவுகளை உணராது நிற்பானைக் கண்டாள். காதல் வெறியால் நாண் இழந்து நிற்பவன் அறிவு, தன் காதல் நிறைவேறினாலல்லாது தெளியாது என உணர்ந்தாள். அதனால், "ஏடா! இங்கு எல்லோரும் வருவர்; இவ்விடம் நம் காதல் நிகழ்ச்சிக்கு ஏற்றதன்று, கறவைக் கலம் ஏந்தி மேய்புலம் நோக்கிச் செல்வேன்! அப்போது ஆங்கு வருக!” எனக் கூறி, அவன் காதலுக்கு இசைந்து அவனை அனுப்பினாள். காதல் நிறைவேறிய களிப்போடு அவனும் அவ்விடம் விட்டு அகன்றான்.

'பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்;எம் தாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை முன்னை நின்றாங்கே விலக்கிய, எல்லா! நீ, என்னையே? முற்றாய்; விடு.

விடோன்; தொடீஇய செல்வார்த் துமித்து எதிர்மண்டும் 5 கடுவய நாகுபோல் நோக்கித், தொடுவாயில் நீங்கிச் சினவுவாய் மற்று.

நீ நீங்கு; கன்று சேர்ந்தார் கண் கதவு ஈற்றாச் சென்றாங்கு வன்கண்ணன் ஆய்வரல் ஒம்பு; யாய் வருக ஒன்றோ, பிறர் வருக; மற்றுநின் 10 கோவரினும் இங்கே வருக; தளரேன்யான் நீ அருளி நல்கப் பெறின்

நின்னையான் சொல்லினவும் பேணாய், நினை.இக் கனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து எனையது உம் மாறு எதிர்கூறி மயக்குப் படுகுவாய்! 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/188&oldid=708032" இலிருந்து மீள்விக்கப்பட்டது