பக்கம்:முல்லைக்கொடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இசையார். எத்துணை உளங்கலந்த காதலராயினும், காதலின் பயனான இல்வாழ்வினை ஏற்குமுன், ஏறுதழுவி ஆண்மையைக் காட்டியேயாதல் வேண்டும். கொல்லேறு அஞ்சுவானை ஆயமகள் என்றும் விரும்பவே மாட்டாள். இந்த நிலை அன்று. அதனால், கொல்லேறு தழுவுதல் இளைஞர் வாழ்க்கைப் பொறுப்பினை ஏற்கும் தகுதிக்கு உரியவராய் விட்டனர் என அறிந்து கொள்வதற்கான தேர்வுப் போட்டியாக அந்நாள் விளங்கிற்று.

ஒரோ வொருகால், பெற்றோர் முலைவிலை கொண்டும், தம்மக்களின் காதல் உளம் அறிந்தும் மனங் கூட்டுவிப்பது நேர்வதும் உண்டு. ஆனால், இஃது ஆயரினப் பெருங்குடித் தலைவர்பால் பெரும்பாலும் நிகழ்வதில்லை. -

ஆனால், இந்நாளிலோ, பொங்கல் புதுநாள் விழாக் கொண்டாடி மகிழ்ந்ததன் பின், மறுநாள் மாட்டுப் பொங்கல் விழாநாளில், மஞ்சி விரட்டில் இளைஞர் பலரும் கலந்து கொள்வது என்று ஏற்பட்டு விட்டது. மற்போர், சிலம்பம், வாள்வீச்சு போன்ற உடலுறுதி காட்டும் போட்டியாக இந்நாள் அவ்விழா விளங்கு கின்றது. விழாவினை நடத்தும் குறிக்கோள் அடியோடு மாறிவிட்டது; என்ற போதிலும், விழா நடைபெறுகின்றது; அன்று முழங்கிய அதே ஏறு கோட்பறையின் ஒலியே இன்றும் களத்தில் ஒலிக்கின்றது. .

சிறப்பும் ஆசிரியரும்

கலித்தொகை மிகச் சிறந்த தமிழ் நூல்; கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்று, புலவர்களால் போற்றி உரைக்கப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/9&oldid=707853" இலிருந்து மீள்விக்கப்பட்டது