பக்கம்:முல்லைக்கொடி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமையுடையது. ஐவகை நிலத்தைக் குறித்தும் ஐந்து பகுதிகள் இதன்கண் உள்ளன. அவை ஒவ்வொன்றுமே கற்பனையூற்றின் களஞ்சியங்கள்தாம். என்றாலும், முல்லைக் கலியில் நாம் சந்திக்கும் அதே ஆயர்களின் மரபினரை இன்றும் கண்ணெதிரே காண்பதாலும், அவர் இன்றும் தம் பழைய குடிச்சிறப்பின் பல நயங்களையும் உடையவராக விளங்குவதாலும், முல்லைக்கலியிலே நாம் தனித்த ஒரு பேரின்பச் சுவையை உளங்கனிந்து அநுப விக்க முடிகின்றது.

பதினேழு பாடல்களையே கொண்டது என்றாலும், பாக்களின் அமைப்பிலே ஆட்சி செலுத்தும் செந்தமிழின் இனிமையும், வண்மையும் நம்மைப் பெரிதும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. வசந்த காலப் பொதியத் தென்ற லின் இனிமையையும், குற்றமற்ற நல்யாழிலே இசை வல்லான் ஒருவன் திறன் பட மீட்டி எழுப்பும் இன்னொலியையும், பெண்மையின் எழிலெலாம் ஒருருக் கொண்ட நற்கன்னியொருத்தி, தாளத்தின் முறை எள்ளள வும் பிசகாமல், தக்க அபிநயங்களுடன் ஆடிக்காட்டும் நடனத்தின் இனிய நலனையும், குதலைச் செவ்வாய்க் குறுமதலையரின் மழலைச் சொற்களிலே தவழும் உளம் பிணிக்கும் ஆற்றலையும், இம் முல்லைக் கலியிலே நாம் அறிந்து அநுபவிக்கின்றோம். ஆசிரியர், தம் உறுப்பினரைப் படைத்துச் சொல்லோவியங்களிலே அவர்களைத் தீட்டி யுள்ள செவ்வியைச் சொல்லால் வருணித்துப் போற்றுதல் நம்போல்வார்க்கு எளிதல்ல. அவர்களெல்லாம், நம் கண்ணெதிரே நின்று நடித்துக் காட்டினாற்போலும், அவர்கள் உரையாடல்களிலும் பாவங்களிலும் நாமுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/10&oldid=707854" இலிருந்து மீள்விக்கப்பட்டது