பக்கம்:முல்லைக்கொடி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலந்து மெய்ம்மறந்து நிற்பது போலும், ஓர் இன்ப மயக்கம், பொருள் நயம் உணர்ந்து படிக்கும் போதெல்லாம், நம்மை யறியாமலேயே நம் உள்ளங்களில் ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு, நயங்கள் பலவாக, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் தமிழ்த் தேனை அள்ளியள்ளிச் சொரிகின்றன, முல்லைக்கலியின் பாடல்கள்.

மிகமிகச் சிறந்த காவியப் பண்பின் நிலைக்களனாக விளங்கும் வண்ணம், தம் நுண்மாண் நுழைபுலச் செவ்வியால், முல்லைக் கலியினை ஆக்கித் தந்த செந்தமிழ்ச் சான்றோர்க்கு, நாம் என்றென்றும், வழிவழி கடமைப்பட்டுள்ளோம்; இத்தகைய செறிவுடைய தமிழ் நூல்கள் பல உள்ளதனால்தான்், தமிழ் அன்னை, தன் அன்றைய எழிலும் நலனும் இன்றும் குன்றாதவளாக, மென்மேலும் பாவலரும் நாவலரும் பணிபல புனைந்து போற்ற, என்றுங் கன்னியாக ஏற்றமுடன் விளங்கு கின்றாள்.

முல்லை என்பது அகத்துறை நூல்களில் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் பொருளாகக்கொண்டு, கற்று வல்ல சான்றோர் சுறையுற ஆக்கும் செய்யுட்களைக் கொண்ட தாகும். தனித்துக் கண்டு, உளங்கலந்து களவில் உறவாடி மகிழ்ந்த தன் காதலனை, என்று மணந்து இன்புறுவது, இல்லறங் காண்பது எனக் கன்னி நல்லாள் ஒருத்தி எண்ணி எண்ணி ஏங்குதலும், ஆற்றியிருத்தலும், அதன் நிமித்தமாக நிகழும் பல்வேறு சம்பவங்களும், பிரிந்து வினைமேற் சென்ற காதலனின் வரவை எதிர்நோக்கிக் காத்துக் காத்து, நாளொற்றித் தேய்ந்த விரலுடன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/11&oldid=707855" இலிருந்து மீள்விக்கப்பட்டது