பக்கம்:முல்லைக்கொடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

துயரத்தின் எல்லையுள் துடிக்கும் காதல் மனைவி ஒருத்தி ஆற்றியிருத்தலும், அதன் சார்பாக நிகழும் நிகழ்ச்சிகள் பலவும் இம் முல்லைத் துறையுள் அடங்கும்.

"மாயோன் மேய காடுறை யுலகமும்” என்ற சான்றோர் வாக்கின்படி, முல்லைக்கு உரிய தெய்வம், மாயோன் ஆகும். அதிலும் மாயோனின் அவதாரமாகிய கண்ணனையே ஆயர்கள் பெரிதும் போற்றி வழிபட்டு வந்தனர். கண்ணன், திருமாலின் அவதாரமாவதுடன், தம் இனத்தோடு வாழ்ந்து, தம் குடி மரபின்படி ஒழுகி வந்ததால், ஆயர்க்குக் கண்ணன் வடிவில் மாயோனை வழிபடுவதிலே ஒரு தனித்த மன நிறைவு உண்டு என்றும் நாம் கூறலாம். கோகுலத்திலே வளர்ந்து, வெண்ணெய் திருடி உண்டு, நிரை மேய்த்து, ராதையின் காதலனாக விளங்கிய கண்ணனை, ஆயர் போற்றியதில் தெய்வ பக்தியுடன், இனப் பற்றும் கலந்து ஒளி வீசுகின்றது என்றே நாம் கருதலாம்.

ஆயர்குடித் தலைமக்கள் குறும்பொறை நாடன், தோன்றல், அண்ணல் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப் பெறுவர். அதே போன்று, தலைவர் குடிப் பிறந்த ஆய்ச்சியர் கிழத்தி, மனைவி என வழங்கப் பெறுவர். தலைமக்களன்றிப் பொதுவான பிற ஆயர் குடி யினரான ஆண்கள் கோவலர், இடையர், ஆயர், பொதுவர் என்றும், பெண்கள் இடைச்சியர், கோவித்தியர், ஆய்ச்சியர், பொதுவியர் என்றும் அழைக்கப் பெறுவர்.

காடும் காடு சார்ந்த நிலப் பகுதியுமே ஆயர் வாழும் பகுதியாதலின், அங்கே பல்வகைப் பறவையினங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/12&oldid=707856" இலிருந்து மீள்விக்கப்பட்டது