பக்கம்:முல்லைக்கொடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

விலங்கினங்களும் மிகுதியாகக் காணப்படும். எனினும் கானக் கோழியும், சிவலும் ஏராளமாக வாழும் பறவை யினங்கள் என்றும், முயல், சிறுமான், உழை முதலியன பெரும்பான்மையாகக் காணப்பெறும் விலங்கினங்கள் என்றும் கூறுவர்.

பெரும்பாலும், ஆயர்கள் காடுறை வாழ்வே மேற் கொண்டவர். அதனையொட்டியே அவர்தம் ஊர்களும் அமைந்து விளங்கும். அவை பாடி, சேரி, பள்ளி என்று கூறப்படும்.

காட்டிலே ஆயர்க்கும், அவர் பேணும் நிரைகட்கும் நீருட்டி வாழ்விப்பன கான்யாறுகள் ஆகும். மரங்களில் கொன்றை, காயா, குருந்து முதலியனவும், பூக்களில் முல்லை, தோன்றி, பிடவம், தளவம் என்பனவும், முல்லை நிலத்திற்கு உரியனவாகும்.

ஆயர்களின் உணவுக்குப் பெரிதும் பயன்பட்ட தான்ிய வகைகள் வரகு, சாமை, முதிரை முதலிய புஞ்சைப் பயிர்களாகும். ஏறுகோட் பறையும், முரசும், முல்லை யாழும் ஆங்கே வழங்கிய இசைக் கருவிகள். சாதாரிப் பண் இசைத்து மகிழ்வது ஆயர்க்குரிய வழக்கம் ஆகும். -

வரகு முதலியன விதைத்தல், களைகட்டல், அறுத்தல், கடாவிடுதல் முதலியனவும், நிரை மேய்த்தலும் ஆயர்களின் தொழில்கள். அவர்களிடையே நிகழும் செய்திகளும் மேற்குறித்தவை பற்றியதாகவே மிகுதியாகக் காணப்படும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/13&oldid=707857" இலிருந்து மீள்விக்கப்பட்டது