உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் நேரத்திலும் 66 - 22 அமெரிக்காவின் கண்ணோட்டம் என்ன? ரஷ்யாவின் கருத்தோட்டம் என்ன?" என்ற நினை வோட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நேரத்திலும் இன்னும் நேரு படிக்கும் போதும், படுக்கும் போதும் உண்ணும் போதும், உலாவும் போதும்' அவரது நினைவாக, கனவாக அவர் முன்னே நிறுத்தப்பட்டு விட்டது திராவிட உணர்ச்சி ! நமது எழுச்சி! ஆகவேதான் அடிக்கடி வருகிறார்; நம்மைப் பற்றிப் பேசுகிறார் ! முன்பெல்லாம் தென்னாடு என்றழைக்கவே-திராவிடம் என்று சொல்லவே-திராவிட முன்னேற்றக் கழகம் என்று குறிப்பிடவே பயந்திருந்தார் நேரு, எங்கே நமக்கு விளம் பரம் கிடைத்து விடுமோ என்ற வீணான எண்ணத்தால். ஆனால் இன்றோ செல்லுமிடமெல்லாம் சீறிப்பாய்கிறார்- சிந்தை தடுமாறுகிறார்- செல்லாத சொற்களை வீசுகிறார்- தென்னாட்டிலே பிரிவினை உணர்ச்சி முழுரூபம் பெற்று விட்டதைக் கண்டு ! அந்த உரிமைக் கிளர்ச்சி- விடுதலைப் போர் எங்கேபோய் நிற்குமோ என்று கவனிக்கிறார். ஆனால் நாமோ திராவிட முன்னேற்ற கழகத்தின் லட்சியத் தைக் காப்பாற்ற. அண்ணாவின் சுட்டுவிரல் அசையுமா- எங்கே, ஒரு கண்ஜாடை காட்டமாட்டாரா-"தம்பிகளே. புறப்படுங்கள் !" என்று கட்டளை இடமாட்டாரா என்று காத்துக் கொண்டிருக்கிறோம். எனக்கு முன்பு பேசிய மாணவத் தோழர் ஒருவர் நான் மாணவர்களைப் பற்றி அதிகம் பேசவேண்டும் என்று சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகம் மாணவர் களிடம் மட்டுமல்ல; திராவிடப் பெருங்குடி மக்களிடம், வீரத் தாய்மார்களிடம், பாடு படும் பாட்டாளிகளிடம் நெருங்கியத் தொடர்பு கொண்டிருக்கிறது. ஆகவே