உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 உணர்ச்சியோடும் உரிமையோடும். உறுதி நிறைந்த பண் போடும் "இலட்சியத்தை ஈடேற்றியே தீருவோம்" என்ற எதிர்கால இன்ப முடிவிலே நடைபோட்டு வளருகிறது. ஈ பெரியோர்களே ! திராவிட முன்னேற்றக் கழகம் உங்களைப் பார்த்து வேண்டுவதெல்லாம் உங்களது பழங் கால சரித்திரத்தை சற்றுப் புரட்டிப் பார்க்க வேண்டு மென்பதுதான்! நீங்கள் பிறந்த நேரத்தில் வெள்ளையன் நம் இன்பபூமியை ஆண்டு கொண்டிருந்தான். ஆண் டாண்டு காலமாக அடிமையாகவே வாழ்ந்து வந்தீர்கள். வேண்டாத வேற்று நாட்டானின் ஆட்சியிலே அல்லல் பட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் மட்டுமல்ல: உங்க ளுக்கும் முந்தைய - உங்களைப் பெற்றெடுத்தவர்கள் ஆரிய மாயையிடம் கட்டுண்டு கிடந்தார்கள். ஆனால் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அவர்களுக்கு முந்தைய திராவிடர்கள் எப்படி வாழ்ந்தார்கள் ? சேரனும், சோழனும், பாண்டியனும் ஆண்ட திராவிடத்திலே--சுதந் திரத் திருவிடத்திலே உரிமையுடன் வாழ்ந்திருந்தார்கள். ஆனால். அவர்களது பரம்பரையிலே வந்த நாமோ இன்று வாழும் நிலை என்ன? அடிமைகளாக - தொழும்பர்களாக- பொட்டுப் பூச்சிகளாக உலவுகிறோம். ஏன் இந்த நிலை ? எவனெவனோ வருகிறான் - ஏதேதோ பேசுகிறான் - அடக்குமுறைகளையும் வீசுகிறான் -ஏன் இந்த இழி நிலை? ? பெரியோர்களே ! சாகப்போகும் வயது உங்க ளுடையது. வாலிபப் பருவத்தை கடந்துவிட்ட வயோதிக வயது! மகனுக்குக் திருமணம் முடித்து-அவனது சுக வாழ்வு கண்டு - சிங்காரப் பேரனையும் தொட்டுப் பார்த்து விட்டீர்கள்! இன்னும் அப்பேரனுக்கும் மணம் செய்து பார்க்கும் பாக்கியம் பெற்ற சிலரும் உங்களிடையே