உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மறைக்கப்பட்ட மாவீரர்கள் பட்டியலில் அடுத்த படியாக நிற்பவன் வடசென்னைப் பாண்டியன், கடைத் தெரு சென்று களிப்போடு வீட்டுக்கு நுழைந்த அந்த கடமை வீரனின் கண்களிலே மிளகாய்ப் பொடி தூவி குத்திக் கொன்றார்கள். அதோடு மட்டுமல்ல, குடும்பத்தின் ஒரே வாலிபன்- பெற்றதாய் பெரிதுவக்க குடும்பத்தை நடத்தியவன்- லால்குடி நடராசனைப் பிரிந்தோம் கல்லக்குடியிலே ! மண நாள் குறித்து வைத்தாள் தாய்-ஆனால் பிண மாகத் திரும்பினான் திருமகன்-கேசவன் என்னும் வாலி வன்! இன்னும் தூத்துக்குடியிலே நால்வரைத் துடிக்கத் துடிக்கப் பறி கொடுத்தோம் ! உயிர்களை மட்டுமல்ல நண்பர்களே, அங்கங்களையும் அறுத்துக் கொடுத்தோம். அடக்குமுறையின் அகோரப் பசிக்கு! கால்களைத் தந்தோம்; கைகளை வெட்டிக் கொடுத் தோம். இன்னுமொரு பரிதாபம் தோழர்களே, செபஸ் டியன் என்னும் வாலிபன்-தனது ஆண் குறியை இழந் தான் - வாழ்விலே அவன் அனுபவிக்க வேண்டிய பேரின்ப சுகத்தை அழித்து-அந்த பத்தொன்பது வயது பாலகனின் வாழ்வைப் பாலைவனமாக்கி விட்டது இந்த பண்பில ஆட்சிபீடம். - வாடுகிறான் வாலிபன் ! மறைந்த மாவீரர்களின் குடும் பத்தினர் வசை பாடுகிறார்கள் ! ஆனால் இத்தகைய கோர விளையாட்டுகளை விளையாடி விட்டுத்தான்- வெறிச் செயல்களைச் செய்த பின்னும்தான் சிரிப்பு நடை போடு கிறார்கள் சீர்கெட்ட ஆட்சிபீடத்தினர்.