உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இத்தகைய கோரச் சம்பவங்களுக்கும் காரணமாக இருந்த அவர்கள்தான் நமது போராட்டங்களைக் குறித்து கேலி மொழிகளையும் உதிர்க்கிறார்கள். ஆனால்...இன்னும் ஒரு குரல்-காங்கிரசின் குரல் அல்ல-அதன் குரலைவிட அழுத்தமானத் தொனியிலே கண்ணியமற்ற கேலிக்குரல் ஒன்று எழும்புகிறது. அதுவும் நமக்கு அருகிலிருந்தே எழும்புகிறது. கல்லக்குடிப் போராட்டம் முக்கியம்தானா? சாதாரண : மாக ஒரு ஊரின் பெயரை மாற்ற ஒரு போராட்டம் நடத்த வேண்டுவது அவசியம்தானா ?-இப்படிக் கேட் கிறார்கள் நம்மோடு நடமாடி வரும் கம்யூனிஸ்ட் தோழர் கள். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். ஒரு ஊரின் பெயரை மாற்ற ஒரு போராட்டமா? "மக்களின் குரல் மாற்று என்று சொன்னால் மாற்றிவிட வேண்டியதுதானே நாடாள்வோர் கடமை. கடமை மறந்தது காங்கிரஸ் ஆட்சி! ஆகவேதான் போராட்டம் உருவானது, 'தேவை யானது தானா ?' என்று கேட்பானேன் ? அதை நேரு உணர வேண்டும்; லால் பகதூர் சாஸ்திரி உணரவேண்டும், பெங்களூருக்கருகிலே அழிக்கல் என்றிருந்த இடத்தை வாழைப்பட்டினம் என்று இரண்டே மாதங்களில் மாற்றிவிட வில்லையா ? தஞ்சை மாவட்டத்திலே திருநாட்

  • டியத்தான்குடி என்ற இடத்தை ஒரே ஒரு சர்மா முயன்ற

காரணத்தினால் மாவூர் ரோட் என்று மாற்றிவிட வில்லையா? ஆனால் பலர் ஒன்று சேர்ந்து பலமுறைச் சொல்லியிருந் தும் -பஞ்சாயத்து போர்டுகளும், நகரசபைகளும் தீர்மானங் கள் நிறைவேற்றியும் டால்மியாபுரம் பெயர் மாற்றட்பட வில்லை ஏன் ? அது சாதாரணமான பெயர் மாற்றப் போராட்டம் அல்ல; வடநாட்டு ஆதிக்கம் இங்கு இருக்கக் கூடாது என்று முழங்கும் போராட்டம்.