உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 தாக கருதும் கருணாநிதி அவர்கள்தான் தன் கைப்பட கீழ்க் கண்ட உரிமையையும் எமக்களித்திருக்கின்றார். இதோ அந்த உண்மையான உரிமை கடிதம் மு. கருணாநிதியின் உரிமைக் கடிதம் K. R. நாராயணன் வெளியிட்டுக் கொள்வதற்கு, என் அனுமதி பெற்றுள்ள "முல்லைக் கொல்லை என்ற புத்த கத்தை ஒரு பதிப்பு வெளியிட்டுக் கொள்ள உரிமை அளித் திருக்கிறேன். (கையொப்பம்) கருணாநிதி 19-7-54 தோழர்களே முன் பக்கத்திலே போடப்பட்ட அறிக் கையையும், மேல்கண்ட அறிக்கையையும் பார்த்தீர்களா? முன்னுக்குப்பின் முரணாக நடந்திருக்கிறார். அறிக்கை யிலே 16 பக்கங்கள் என்று எண்ணிக்கையை தந்திருக்கிறார். அளித்த உண்மைக் கடிதத்திலே புத்தகம் என்று தெளிவாக எழுதியிருக்கிறார். இதுதான் நேர்மையா ? மக்களுக்கு நம்பிக்கையோடும். நேர்மையோடும் நடப்பதாக எண் ணும் கலைஞர் கருத்திலே மாற்றத்தோடு, சிந்தனையிலே யிருந்து தவறி பேனா சென்ற வழியிலே அறிக்கை விட் டிருக்கிறார். இது எல்லோர் இதயத்தை மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் மதிப்பையே குறைத்து விடுவ தாகும். கருத்துக்களை கணக்கிட்டு சொல்கிறார். 16 பக்கங்கள் மட்டுமே தன் கருத்தென்றும் மிகுதியுள்ள பக்கங்கள் தன் கருத்துகளை கொண்டதல்ல என்றும் கூறியிருக்கிறார். தோழர்களே 'முல்லைக் கொல்லை'யை முதல் பக்கத்