உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திலிருந்து (அதாவது உரிமைக் கடிதம் உள்ள பக்கத் தோடு) படிக்கிறீர்கள். அதோடு இந்த அறிக்கையையும் படிக்கிறீர்கள். நீங்கள் படித்த பதினாறு பக்க கருத்துக் களிலும் அதற்கு மேற்கொண்டுள்ள பக்கத்திலும் கருணாநிதியின் கருத்துக்கள் கொண்டவைகள்தானே ? பதில் கூறுங்கள். பதினாறு பக்கத்து 'மேட்டர்' போதாது என்று கூறிய தும் கருணாநிதி அவர்கள் சாதாரணமாக பதில் கூறவில்லை. இன்றைக்கு நாளைக்கு என்று நந்தனாருக்கு வேதியர் அளித்த உரிமையைப்போல இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லி வழி அனுப்பிக்கொண்டே இருந்தார். பல மாதங் களுக்குப்பின் சென்ற 25-4-54ம் தேதி அன்று காலையியே தான் தீர்ப்பை கூறினார்... 'நான் இன்று மாதவரத்திலே பேசப்போகிறேன். அந்த சொற்பொழிவை சொர்ண வேலுவை வைத்து சுருக்கெழுத்து எடுக்கச் சொல்லி போட்டுக்கொள் ஏன்றார். அவர் சொன்னபடியே மாதவரத்து சொற்பொழிவை "முல்லைக் கொல்லை'க்கு பின் சேர்த்திருக்கிறேன். தோழர் சொர்ணவேலு முரசொலி காரியாலயத்திலே பணியாற்றுகிறவர். அவர்தான் மாதவரத்து சொற் பொழிவை தன் கைபடஎழுதி அத்தை மகள் என்ற தலைப் பிட்டு 49 பக்கம் கொண்ட கொண்ட கையெழுத்துப் பிரதியை தோழர்கருணாநிதியிடம் காட்ட, கருணாநிதி அவர்கள் தன் கைபட ஒவ்வொரு பக்கங்களிலும் திருத்தியிருக்கிறார். மற்றும் 'முல்லைக் கொல்லை'யை தோழர் என். வி. நட ராசன் அவர்கள் தன் பத்திரிகையான 'திராவிடனில் பிர சுரித்து இருந்தார். அவரிடம் கேட்ட போது தோழர்