உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமைக் கடிதம் 4, 74 மு. கருணாநிதியின் உரிமைக் கடிதம், K. R. நாராயணன் வெளியிட்டுக் கொள்வதற்கு என் அனுமதி பெற்றுள்ள "முல்லைக் கொல்லை'; என்ற புத்தகத்தை ஒரு பதிப்பு வெளியிட்டுக் கொள்ள உரிமை அளித்திருக்கிறேன். கையொப்பம் மு.கருணாநிதி. 19-7-54. அத்தனை கடிதங்களையும் படித்தீர்கள். இந்தக் கடிதங் களின் உரிமைக் கரங்களிலிருந்து அவர் தப்பவே முடியாது. பம்பாய் பேச்சையும், மாதவரத்துப் பேச்சையும் அச்சு உருவத்தில் புத்தகமாக 48 பக்கங்கள் வரும் என்று அறிந்தும் ஏனோ தெரியவில்லை 16 பக்கங்கள் என்று அறிக் கையிலே கூறியிருக்கிறார். சமீபத்தில் பத்திரிகைகளில் 'மலைக் கள்ளன்'-திரைக் கதை வசனப் புத்தகம் கீழ்க் கண்ட இடத்தில் கிடைக்கும் என்று என் முகவரியை கொடுத்திருந்தேன், அந்த முகவரியால் மலைக் கள்ளன் வசனத்தை நான் வெளியிடுகிறேன் என்று அவசரப்பட்டு தீர்மானித்து பொறாமையின் உணர்ச்சியால் தூண்டப்பட்டு அறிக்கையை விட்டுவிட்டார். "அவசரக்காரனுக்கு......" என்று கூறுவார்கள். அதைப் போல முன்னால் நடந்த சம்பவங்களையும். உறுதிப்பாடுகளையும் மறந்து அறிக்கை விட்டிருக்கிறார். இது கட்சியிலே உள்ளவர்கள் செய்ய