உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை களும் வேள்விச் சடங்குகளும் ஆரியக் குருக்கள்மார் களின் பிறழ்ச்சி அறிவால் எங்கும் மிகுந்து வரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான்மிக்க சான்றோர்கள் 'இங்ஙனந் தீதற்ற உயிர் களின் உடம்பைச் சிதைத்து வேள்விகள் செய்தலாற் போதரும் பயன் என்னை?' என்று தம் ஆரியநண்பருடன் நயமாய்க்கலந்து வழக்கிட்டு அவரிற் சிலரைத் தம் வழிப் படுத்திக்கொண்டனர். இங்ஙனந் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரியநன்மக்கள் சிலர் தாமுந்தழுவி ஒழுகப்புகுந்தகாலத் திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுட நிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறி வுறுத்தி, அவர்செய்து போந்த உயிர்க்கொலையினை நிறுத் இதற் பொருட்டாகத் தமிழ்ச்சான்றோர்களால் இயற்றப் பட்டனவா மென்பதற்கு அவ் வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்ங னம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கி னங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதுங் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக்குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமி முரையும் அதுசெய்யும்படி வலிந்து வருத்தினமையாலும் ஆரியர்க்குந் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வடநாட்டி லிருந்த தமிழ அரசர்குலத்திற் கௌதமசரக்கியர் என் பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்துவந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்

  • வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலில் இதற்

குச் சான்றுகள் காண்க.