உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு உங் லப்புகுந்தார். கல்லாதமக்கள் மனமுங் கரைந்து உருகும் படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத் தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிருவாணம் என்னுக் தூயநிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழைஉயிர் களை ஆயிரமாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலு மேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தா தென்றுங் கெளதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயி னர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும் படியான கௌதமர் கொள்கைகள் சிலநாளிலே எங்கும் பரவலாயின. மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவுகொண்டு தம் அறிவால் நல்லன பல வும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங் கருத் துக்களிற் றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளி யிடத்துணிந்தனர். பிராஞ்சு தேயத்திற் றோன்றியதை யொத்த ஒருபெரிய மாறுதல் எங்கும் உண்டாவதாயிற்று. இங்ஙனம் ஒருபெரிய மாறுதல் இந்தியநாடு முழுவதுஞ் சுழன்றுவரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரிய பெரிய நுண் பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ் மொழியினைப் பண்டைநாளிற்போலவே பெரிதும் வளம் படுத்தும் அரியமுயற்சியில் தலைநின்றார். இங்ஙனந் திரு வள்ளுவர் பிறப்பதற்குமுன் ஒரு நானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய சமயவிளக்கமே அக்காலத்திற் றமிழ்மொழியின்கண் அரும்பெருஞ் செந் தமிழ் நூல்கள் பல தோன்றுதற்கு ஒரு பெருங்காரண The French Revolution.