உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் பெய்யப் என உரைப்பினுமாம். கானம் நந்திய செந்கிலப் பெரு வழி - காடு செழித்த செவ்விய முல்லைநிலத்தின் வழியிலே வானம் வாய்த்த-வேண்டும் பருவத்து மழை பெற்ற. வாங்குகதிர்வரகு - வளைந்த கதிரினையுடையவாகு. திரிமருப்பு இரலை - முறுக்குண்ட கொம்பினை யுடைய புல்வாய்க் கலைகள். எதிர்செல் வெண்மழை பொழி யுந்திங்கள் - இனிமேற் பெய்தற்காகச் செல்லும் வெண் புயல் மழையைப் பொழிதற்குரிய கார்காலந் தொடங் கும் ஆவணித்திங்கள் முதலில்; இதற்கு நச்சினார்க்கினி யர் முன்பனிக்காலம் என்று பொருள்கொண்டு இப்பாட் டின் பொருளுக்குச் சிறிதும் இணங்காவாறு உரைகூறி னார். பிறக்கு - பின் துனைபரி துரக்கும் விரைந்து செல்லுங் குதிரையை மேலுந்தூண்டிச் செலுத்தும். வினைவிளங்கு- போர்வினைக்கண் தமதுதிறம் மிக்குவிளங்கும், என்றது தலைமகனது தேரிற்பூட்டிய குதிரைகளை