பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை யுஞ் சிறிய தொழிலாளன் பிசினொடு சேர்த்த, கல்லைப்போலப் பிரியோம்' என்னும் பொருள்படச் 'சிறுகாரோடன் பயி னொடு சேர்த்திய கற்போற் பிரியலம்" என்றும், ஓரிடத்திற் புறந்துறு த்திய நண்டின் கண்களுக்கு வேப்பம்பூ முகையினை உவமை எடுத்து "வேப்புநனையன்ன நெடுங்கட்கள்வன்" என் றும், ஓரிடத்தில் 'வயல் நெல் புதிது ஈன்ற பசிய கதிருக்குச் செல்வர்கள் தமது குதிரையின் உச்சியில் தூக்கிக் கட்டிய தையல் மூட்டுள்ள கவரி மயிரை' உவமையாக எடுத்து "முர சுடைச்செல்வர் புரவிச் சூட்டும், மூட்டுறு கவரி தூக்கியன்ன, செழுஞ்செய் நெல்லின் சேயரிப்புனிற்றுக் கதிர் என்றும், ஓரிடத்தில் மழையில்லாத வானம் பூத்ததுபோல இலை நெ ருங்கிய முசுண்டைச் செடிகள் வெள்ளிய மலர்களைப்பூக்க' என்னும் பொருள் போதா 'மழையில் வானம் மீன் அணிந் தன்ன, குழையாமல் முசுண்டை வாலியமலா என்றும், ஓரி டத்தில் 'பஞ்சின் றொடர் நுனிபோலுந் தலையினையுடைய புதர்களின் மேல் ஏறிப்படரும் இண்டைக் கொடிகளின் நீரில் நனைந்த தளிர்கள் நெய்யில் தோய்த்தனபோல் விளங்கி இரண் டாக இருளைக் கூறுபடுத்தினாற்போல ஒவ்வொரு தளிரும் இரண்டு கூறுபட்டனவாய்க் கரிய நிறத்துடன் அசைய' என் னும் பொருள்படத் "துய்த்தலைப்பூவின் புதலிவர் ஈங்கை, நெய்த்தோய்த்தன்ன நீர்நனை அந்தளிர், இருவர் இருளின் ஈரிய துயல்வா என்றும், ஓரிடத்தில் பச்சை மஞ்சளின் பசிய முதுகைப்போல் சுற்றிலும் பொருத்துடம்பு உடையன வாய் அகழியிற் கிடக்கும் இறா மீன், என்பது விளங்க முற் றாமஞ்சட் பசும்புறங் கடுப்பச், சுற்றிய பிணர்சூழ் அகழியி றவு என்றும், ஓரிடத்தில் 'மயிலின் அடிபோல் மூன்று பிள வாய் இருக்கும் இலைகளையுடைய பெரிய கதிருள்ள நொச்சி' என்பது தோன்ற மயிலடி இலைய மாக்குரல் நொச்சி" என் றும், ஓரிடத்தில் 'கதிர் அரிந்துவிட்ட தினைப்பயிரின் தாள் போன்ற சிறிய பசுங்காலையுடையவாய் ஓடும் நீரில் ஆரால் மீனைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாரை என்பது புலப்படத் "நினைத்தாள் அன்ன சிறு பசுங்கால, ஒழுகுநீர் ஆரல் பார்க்