பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. லும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பாகினைத்தாளிக் கும்போது மேல் எழும் புகை தன் குவளைக்கண்ணிற் பட வும் அப்புறம் முகந்திரும்பினால் அது பதங்கெடும் என்று திரும்பாமல் அதனைவிரைந்து துழாவலும், அங்ஙனமெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராமற்சமைத்த சுவை மிக்க அப் புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச் சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுத் லும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்றலால் அவளது ஒளிமிக்க நெற்றியே முன் விளங்கித் தோன்றுதலும் சில சொற்களால் மிகவிளங் கச் சொல்லிய நுண்மை பெரிதும் வியக்கற் பால தொன் றாம். இப்பாட்டில் உல்லாசமான முல்லை நிலத்திற் கண்வ னும் மனைவியும் நேசமாய் மருவிவாழும் இயற்கை படம் எழுதிக் காட்டினாற்போல எவ்வளவு எளிதாகவும் உண்மை யாகவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது! இப்பொருளருமை யோடு இச்செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் நீர் மடை யில் தெளிநீர் மொழுமொழுவென்று ஓடுவது போல ஓசை யின்பம் உடையவாய் ஒழுகுதலும், ஒரு சொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூற லாகாமல் முன்னும் பின்னு முள்ள பொருட்டொடர்புக்கு ஏற்ப இடையே முழுப்பதல் களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற் பாலன. இன்னும் பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப்புலவர் உலக இயற்கைப் பொருள்களை ஆங்காங்குத் திரிந்து கண்டு பெருங் களிப்பும் பெருகிய மனவெழுச்சியும் உடையராய், வருத்த மின்றி இலேசாகப் பாட்டுகள் பாடினார் என்பதற்குத் தாம் வருணித்துச் சொல்லும் பொருள்களுக்கு அவர்கள் எடுத்துக் காட்டும் உவமைகளே தக்க சான்றாம். ஓரிடத்தில் மான் கொம்பைப் பற்றிச் சொல்லவந்துழி 'இரும்பை முறுக்கினாற் போலுங் கரிய பெரிய கொம்பு' என்னும் பொருள்பட "இரும் பு திரித்தன்ன மாயிரு மருப்பு என்றும், ஓரிடத்தில் இரு வர் நேச ஒற்றுமையினைச் சொல்லும்போது 'கத்தியுறை செய்