பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. லே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பல வகையான அரிய பெ ரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினார். இப்புலவர்களைப் போற் றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல் மிக்க அரசர் பலரும் வள் ளல் பலரும் ஆங்காங்கு மிகுந்திருந்தனர். தமிழ அரசர்கள் பலர் கல்வி வளத்தானும் செல்வ வளத்தாலும் மேம்பட்டுப் போர்வல்லமையினும் பெருமை யடைந்து தமிழ் மொழியில் னைப் பல லிடங்களினும் பெருகச் செய்வதிற் கருத்தூன்றின ராய் இருந்தார். இக்காலத்திலே தான் தனக்கு ஒப்பும் உயர் வும் இன்றி விளங்கா நிற்கும் திருக்குறள் என்னும் அரும் பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான சிறந்த தமிழ்க் காப்பியங்களும், பழமொழி, நான் யணிக்கடிகை முதலான அறநூல்களும் தோற்றமுற்று எழுந் தன . இவ்வைந்நூறாண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப்புல வர்களாற் பாடப்பட்டுச் சிதறிக் கிடந்த அருந்தமிழ்ப்பாட்டுக்க ளெல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு நாலடி நானூறு, புறநா “நூறு, கலித்தொகை முதலிய வகைவகைத் தொகை நூல் களாக இக்காலத்திலே தான் ஒழுங்கு படுத்தப்பட்டன. பண் டைக்காலத்திலே செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் அரிய பெரிய தமிழிலக்கணத்தில் மிகச்சிறந்த பகுதியான பொருளதிகாரத்தின் விரிவையெல்லாம் சுருக்கி அதனைவ டித்த சாரமாக இறையனாரகப் பொருள் என்னும் மனோதத் துவ நூலும் இக்காலத்திலே தான் எழுதப்பட்டது. இன் னும் இக்காலத்திலே இன்றியமையாது அறியற்பால தாம் விசேடம் ஒன்றுண்டு. இதற்கு முன்னெல்லாம் தமிழ் பெ ரும்பாலும் செய்யுள் வழக்கிலே பெருகிவந்தது, இக்காலத் தில் அதனோடு உரைவழக்கும் விரவிப் பயிலத் தொடங்கிற்று; சொல் விழுப்பமும் பொருள் விழுப்பமும் பொருந்த மிக இனியதோர் உரை மிக நுணுக்கமான அறிவினை யுடைய நக் கீரர் என்னும் நல்லிசைப்புலவரால் இறையனாரகப்பொருள் என்னும் நூலுக்கு வரைந்து தரப்பட்டது. இவ்வுரை சூத்தி ரத்தின் பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப்