பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. பட்டதாயினும், மற்றை உரைகள்போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரற் பாலனவாம் அரும்பெருந் தமிழ் நுட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பப் பொலிகின்றது. ஆகவே, இக்காலத்தில் மிகச் சிறந்த உரைகாரராய்த் தோன் றித் தமிழ்மொழியிற் பலவகையான நல்ல சீர் திருத்தங்களெல் லாம் செய்து அதனைப் பெருகச்செய்துவந்த நற்பெரும் புல வர் ஆசிரியர் நக்கீரனார் தாமென்று அறியற் பாற்று. இவ்வைந் நூறாண்டுகளும் விரிந்து பெருகிவழங்கிய தமிழ் நூல்களில் வடமொழிக்கு உரிய விருத்தப்பா என்பது இன்னும் வந்து நுழைந்திலது. இது நிற்க. இனி இங்ஙனந் தமிழ் பெருக்கமுற்று விளங்குதற்கு ஒரு பெருந்துணைக்காரணம் ய் இருந்தது யாது' என்று ஆரா யப் புகுந்தவழிப் பௌத்த சமயம் ஆங்காங்குப் பிரபலமுற்றுப் பரவிவந்தமையே என்பது புலப்படுவதாயிற்று பண்டைக்கா லத்தே ஆசியாக்கண்டத்தின் வடதிசைப்பக்கங்களில் இருந்த ஆரியர் குளிர் நனிமிகுந்த அவ்விடங்களை விட்டு இந்திய நாட் டிற் புகுதன் முன் இவ்விந்திய நாடு முழுவதும் பரவியிருந்த சாதியார் தமிழரேயாவர். தமிழர் இருந்த இவ்விந்திய நாடு பெரும்பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவரெல்லாம், குளிர் மிகுந்த ஆசியாக்கண்டத்தின் 'வடக்கே யுள்ள ஆரியமக்களைப்போல் உடல் வலிமை யுடையராக இருந் திலர். உடம்பில் உரங்குன்றியிருந்தமையால் தமிழர் தமக் குள்ளே கலகம் விளைவித்து ஒற்றுமை குலைவதற்கு இடம் பெறுதலின்றிப் பெரும்பாலும் ஒருமைப்பாடு உடையராய் நாட் கழித்தனர். உடல் வலிவின் குறைவால் அவர் மன அடக்கம் பெற்று எதனையும் ஆழ்ந்தறியும் இயல்புடையராயி ருந்தனர். உலக இயற்கையிலுள்ள அழகினைக்கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல் அவ்வியற்கையின் உள் நு ழைந்து அங்கெல்லாம் பிறழாத ஓர் ஒற்றுமையும், அவ்வொற் ரமையினை நிலைப்படுத்தி மறைந்து கிடக்கும் ஓர் உயிர்ப்பொ ருளினையும் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்கனம் இவ் 1R 1 V. SWAMINATH: Yi [ 17!