பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. வுலக இயற்கையில் மறைந்து விரிந்து கிடக்கும் அவ்வுயிர்ப் பொருளினையே கடவுள் என்று துணிந்து அதனை மனத் தால் தழுதழுப்ப வாழ்த்தி வழிபட்டு வாழ்ந்தனர். அவர் தமது உடல் வலிவின் குறைவால் பலப்பலவகையான சடங்குகள் இயற்றி வழிபடுவதற்கு ஒருப்படாமல், தனியே ஓரிடத்தில் மன அமைதியோடு இருந்து அக்கடவுட்பொருளை மனத்தாற் பல கால் உறைப்பச் சிந்தித்து, அதனால் அறிவாழ முடைய ராய்த் துலங்குவாராயினர். இவர் இவ்வாறு இருப்ப, ஆசியா வின் வடபகுதிகளில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்பு இறுகி மிக்க வலிவும் சுருசுருப்பும் உடையராயிருந்தனர்; உடம்பில் வலிவுமிகா. டைமையால் மன அடக்கம் பெற்று ஓரிடத்தில் மனவமைதியோடும் இருக்கப்பெறாமல் அவர் தொகுதி தொகுதியாகப் பலதிசையிற் பிரிந்து போய் அங்குள் ளாரோடு போர் புரிந்து, அவரையெல்லாம் தம் விருப்பத்தின் வழியிலே நிறுத்திக்கொண்டு மிக்க செல்வவளத்தோடும் வாழ்ந்து வரலாயினர். அவர் மற்றைச்சாதியாருடன் போர் இயற்றப்போகுங் காலங்களினெல்லாம் தா மே வெற்றி பெறற் பொருட்டு அதனைப் பெறு விக்கும் பொருள் யாது என்று ஆராயத்தலைப்பட்டார். அங்ஙனம் அவர் ஆராயத்தலைப் பட்ட வழியெல்லாம் தமக்குள்ள உடம்பின் சுருசுருப்பால் அவர்தம் அறிவு அமைதி யுற்று ஆழ்ந்து செல்லப்பெறாமை யால், உல க ம் நடைபெறுதற்கு வெளிக்காரணங்களாய்த் தோன்றும் ஞாயிறு, திங்கள், இந்திரன் முதலிய வற்றையே கடவுளெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடுங் காலங்களி னெல்லாம் தமதுடம்பின் வலிவினாற் பலவகையான விலங்கு களைக்கொன்று அவற்றின் இறைச்சியைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்வி செய்தும், வேள்விச் சடங்குகளைப் பலவேறு வகையாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர். இருக் குவேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள, 'பகைவரை அழிப்பவனே! இவ்வழிப்பறிகாரர் கூட்டங் களின் தலைவரையெல்லாம் ஒன்றாகத் திரட்டி நின் அகன்ற