பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. ராகலின் அக்கருத்தறிந்து நச்சினார்க்கினியர் அங்கனம் பொரு ளுரைத்துக்கொண்டார் என்னாமோவெனின்; அறியாது கடா யினாய், உலகவியற்கையும் மக்களியற்கையும் அறிந்து வரிசை வரிசையாக அரும்பொருள் விளங்கித்தோன்றப் பாடும் நல்லி சைப்புலவர் அவ்வாறுஓரொழுங்குமின்றிப் பாடினாரென்றல்ல கில் எங்குங்காணப்படாமையானும், அது நல்லிசைப்புலமை ஆகாமையானும் அங்ஙனஞ் சொல்லுதல் பெரியதோர் இழுக் காய் முடியும் என்று உணர்க. அற்றாயின், மிக்க செந்தமிழ் நூற் புலமையும் நுணுகிய அறிவுமுடைய நச்சினார்க்கினியர் அவ் வாறு இணங்காவுரை எழுதியது தான் என்னையோவெனின்; வடமொழியில் இங்ஙனமே செய்யுட்களை அலைத்து மூலம் ஒருபச் சமும் உரைஒருபக்கமுமாக இணங்காவுரைஎழுதியசங் கராசிரியர் காலத்திற்குச் சிலவருடம் பின்னேயிருந்த நச்சி னார்க்கினியர் வடமொழியில் அவர் எழுதிய உரைகளைப் பன்முறை பார்த்து அவைபோல் தமிழிலும் உரைவகுக்கப் புகுந்து தமிழ்ச் செய்யுள் வழக்கின் வரம்பழித்துவிட்டாரென் றுணர்க, வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச்சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலாவுரை என் பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய ஐ.ரையானும் தீபாபண்டி தர் திருப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பானும் உணர்க. இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பொருந்துமிடங்களினெல் லாம் ஏற்றுக்கோடற்பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழந்தமிழ் நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த நச்சி னார்க்கினியர் இவ்வாறு ஒரோவிடங்களில் நலிந்துரை எழுது வது பற்றி இகழப்படுவாரல்ல ரென்பதும் ஈண்டுவற்புறுத்து கின் றாம். இனி இம்முல்லைப்பாட்டினுரை நச்சினார்க்கினிய ராற் பெரிதும் செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகலின், அவருரையின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வை யான வேறோர் புத்தரை பின்னர் எழுதுகின்றாம்; அங்கு அதனைக்கண்டு கொள்க.