பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. மற்றுப்பண்டைக்காலத்துப் புலவரின் அகவற்பாட்டுக்களோ பொருள் இயைபுக்கு இணங்க ஒசை மாறி மாறி நடத்தலின் கேட்பார்க்குக் கழிபேர் உவப்புணர்வினைப் பயந்து நிற்கின் றன இவ்வாசிரியர் கப்பூதனார் சில அடிகளில் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகைபொருத்தியும், வேறுசிலவற்றில் முத் லும் நான்கும் எதுகை பொருந்தச் செய்தும், மற்றுஞ்சில அடி கள் இரண்டிரண்டாய் முதற்சீரில் அவ்வாறு எதுகைபொருர் தவைத்தும், பின்னுஞ்சிலவற்றில் அதுதானு மின்றியும் பல வகையால் ஒசையின்பம் மாறி மாறி வரத்தொடுத்தார். இன் னும் ஆங்காங்கு அமைக்கப்படும் பொருளுக்கு இணங்க அடி கள் மெதுவாகவும், விரைவாகவும், இடையிடையே தெற்றுப் பட்டுஞ் செல்கின்றன. பாடி வீடு இயற்றும் இடத்தில் ஓசை தெற்றுப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசறையினுள் இருக் கும் நிலையைச் சொல்லுமிடத்து ஓசைமெதுவாக நடக்கின் றது; அவன் மீண்டு விரைந்துவருமிடத்து விரைந்து போகின் றது. இவையெல்லாம் அறிவு ஒருங்கி உணர்க. இனி இப்பாட்டினுள் இடைச்சொற்களையும் வேற்று மையுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும்; இவற்றுள் முன்வந்த சொல் லே பின்னும் வருமாயின் பின் வந்தது எண்ணப்படவில்லை. இவ்வைந்நூறு சொற்களுள் நேமி கோவலர் படிவம் கண்டம் படம் கணம் சிந்தித்து கடகம் முரசு விசயம் அஞ்சனம் என் னும் பதினொன்றும் வடசொற்கள்; யவனர் மிலேச்சர் இரண் டும் திசைச்சொற்கள்; ஆக இதனுட் காணப்பட்ட பிறமொ ழிச் சொற்கள் பதின்மூன்றேதாம். எனவே இப்பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று விழுக்காடு பிறசொற் கள் புகுந்தன என்றறிக; ஏனையவெல்லாந் தனிச்செந்தமிழ்ச் சொற்களாகும். . இனி இம்முல்லைப்பாட்டை ஏனைஒன்பது பாட்டுக்க ளோடும் ஒப்பவைத்து நோக்குங்கால் இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையின தாகக் காணப்ப