பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. களை நிமித்தங்கேட்டு அறியலாம் என்று நம்பினர். பகைவர் மேற் சென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக் கம். யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களால் பழக் கிவந்தனர். அரசன் போர்மேற் செல்லும்போது பெண் களும் வாள்வரிந்த கச்சுடனே சென்று பாடி வீட்டில் அவளை உபசரித்தனர். கடாரத்து நீரிலே இட்ட நாழிகை வட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர். கிரீசு முதலான அயல்நாடுகளி லுள்ள யவனர் என்னஞ் சிற்பிகளை வரவழைத்து அருமை மிக்க பலசிற்பவேலைகள் செய்து வந்தனர். இவ்வாறே சீவக சிந்தாமணியிலும் தம்புலன்களால் யவனர் தாட்படுத்த பொ றியே" என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமைகாண்க, மிலேச் சதேசத்திலுள்ள ஊமைகளை வருவித்துத் தமிழஅரசர் தம் பள்ளியறைக்கு அவர்களைக் காவலாக இருத்தினர்; ஊமைகள் அல்லாரை அங்குவைப்பின் அரசன் பள்ளியறைக்கண்ண வான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளிவிடுவரெ னவும், ஒருவரோடொருவர் சிற்சிலபொழுது கூடி முணு முணுவென்று பேசுதலுஞ் செய்வராதலால் அதனால் அரசன் துயில்கெடுமெனவும் கருதிப்போலும் உடமைகள் அங்ஙனம் பள்ளியறைக் காவலராக இருத்தப்படுவாராயினர் ! இன்னும் ஏழடுக்கு மாளிகை முதலான உயர்ந்த கட்டிடங்களும், இன் பம் நுகர்தற் கரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முதலான நால்வகைப் படைகளும் பிற வளங்களும் பழந் தமிழ்நாட்டுமன்னர் உடையாய் இருந்தன ரென்பதும் பிறவும் இனிது விளங்குகின்றன.