பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள். இம்முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினி யர் இப்பாட்டுச்சென்ற வழியே உரை உரையாமல், தம் உரைக் கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுந்து தமக்கு வேண் டியவாறெல்லாஞ் சொற்களை அலைத்தெடுத்து ஓர் உரை எழு துகின்றார். இங்கனம் எடுத்து உரை எழு துவனவெல்லாம் 'மாட்டு' என்னும் இலக்கணமா மென அதனியல்பைப்பிறழ உணர்ந்து வழுவினாரென்பதனை முன்னரே காட்டினாம்; ஆண் டுக்கண்டுகொள்க. இனி இங்கு அவர் உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் நெறிப்பட்டொழுகும் இயற்கை நன்முறைகடைப்பிடித்து, வேறோர் புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றாம் காண்க. (க- சுவரிகள்) அகன் றகையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திரு மாலைப்போல உலகத்தை வளைத்துக் கடல்நீரைப்பருகி வல மாக உயர்ந்து மலைச்சிகரங்களில் தங்கி எழுந்த மேகம் முதற் பெயலைப்பொழிந்த மாலைக்காலம் என்க. கரியநிறம் பற்றியும், உலகமெல்லாம வாைந்த தொழில் பற்றியும், நீர் ஒழுகா நிற்ப நிமிர்ந்தமைபற்றியும் திருமாலை மேகத்திற்கு உவமைகூறினார். மாவலி வார்த்த நீர் கைகளில் னின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்தது போல நீரைச்சொரிந்து கொண்டே உயர்ந்த மேகம் என்று உரைக்க. நனந்தலை - அகன்ற இடம். கேமி-சக் கிரம். வலம்புரி பொ றித்த-வலம்புரிச்சங்கை வைத்த. 'மா தரங்கு' என்பதனை 'மா ல்' என்பதனோடு கூட்டித் திருமகளை மார்பில் தாங்கும் மால்' என்று பொருளுரைக்க. பாடு இமிழ் பனிக்கடல்-முழக்கம் இடும் குளிர்ந்த கடல். கொடுஞ்செலவு - விரைந்து போதல். சிறுபுன்மாலை- பிரித்தார்க்கு வருத்தம் விளைக்கும் சிறுபொழு தானமாலை.