பக்கம்:முல்லை கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வரிந்து கட்டிய பட்டத்தாரும், அரையில் இறக்கி முடிந்த துண்டுமாய் எழுந்து நின்ற அவர் வேஷத்தைக் கண்டு எனக்கும் சிரிப்பு வந்தது, கர்ணன் வளைக்காத வில்லை இந்தப் பிராமணனா வளைக்கப் போகிறான் என்று எண்ணியபோது மனம் குதித்தாலும், கர்ணனின் தோல்வியின் உறுத்தல் நிற்கவில்லை . ஆனால் அர்ஜுனனோ எவ்வித சிரமமுமின்றி வில்லை நாணேற்றினார். வளைத்தார். நிபந்தனைப்படி, குறித்த லக்ஷயத்தையும் அடித்து விட்டார்! வாய்விட்டுச் சிரித்துக்கொண்ட மண்டபம் முழுவதும், மெளனத்தில் சமாதி யடைந்தது. எனக்கு என்னை உணரச் சக்தியில்லை. பக்கத்தில் நின்ற திருஷ்டதும் யுனனை நிமிர்ந்து பார்த்தேன். அவன் தலை தொங்கிப் போயிருந்தது. நான் அர்ஜுனனைப் பார்த்தேன். அவருடைய பிராமண வேஷம் என் கண்ணை மழுக்கியது. அர்ஜுனன் சபையை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு அண்ணனைப் பார்த்து, "துருபத குமாரா' என்று அருமையாக அழைத்தார். அண்ணன் குனிந்த தலை நிமிர்ந்து என்னைப் பார்த் தான். பிறகு வாய் திறந்து சொன்னான் : கிருஷ்ணை, அவருக்கு மாலையிடு.' கையிலுள்ள மாலை நடுங்கி பூக்கள் உதிர்ந்தன. எனினும் அவருக்கு மாலையிட்டேன். மாலையிட்டுவிட்டு கர்ணன் இருந்த பக்கம் திரும்பினேன். அங்கு அவரைக் காணவில்லை. சபை கலைந்தது. நானும் அர்ஜுனருடன் நடந்தேன். சகோதரர் நால்வரும் பின் வந்தனர். குயவர் சேரி சென்ற தும், புத்திரர் சொன்ன சொல்லுக்கு, "ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று குந்திதேவி கூறியதும் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/102&oldid=881437" இலிருந்து மீள்விக்கப்பட்டது