பக்கம்:முல்லை கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அரசே!' "யாரது?’ என்று கேட்டுக்கொண்டே திரும்பினேன். வாயிலில் நின்றுகொண்டிருந்த வீரன் சொன் னான். 'கர்ணன் விழுந்துபட்டார்!'-வார்த்தைகள் முக்கித் திணறிப் பிறந்தன. கர்ணன் இறந்தானா?" என்று. கேட்டேன். ரதத்திலேறிக் களத்துக்கு விரைந்தேன். களம் அமைதியாயிருந்தது. கர்ணன் விழுநது பட்டான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டேன். காணனைக் கண்டேன். கர்ணன் இன்னும் சாகவில்ல்ை, தேர்க்காலின் அடியில் வர்மத்தில் பாய்ந்த வாளியைப் பிடித்தவாறு கிடந்தான். கர்ணனின் குனித்த வில் தேர்ப் பாதங்களில் சிக்கிக் கிடந்தது, மார்பில் புரண்ட மாலைகளை நனைத்து ரத்தம் பரவிப் பாய்ந்தது. முகம் வெளிறி, கண்களில் பூப்படர ஆரம்பித்திருந்தது, போர் வேகத்தில் சுவாச கோசங்கள் பெயர்ந்து முக்கு வழியாக ரத்தம் வழிந்: தோடிக்கொண்டிருந்தது. உலர்ந்த உதடுகளில் சாம்பல் படர்ந்து. நெளியும் மலைப்பாம்பைப்போல் திரளும் புஜக் கோளங்களும், சுவாசமும் தளர்ந்துகொண் டிருந்தன. கண்கள் ஒளிமங்கி பூக்க ஆரம்பித்தபோதிலும், ஆழங்காணாத ஏக்கமும் வேதனையும் கண் கருப்பில் பிரதிபலித்தன. அவனால் பேசமுடியவில்லை. திடீரென்று கூட்டத் தைப் பிளந்துகொண்டு ஓடி வந்தது ஒரு உயிர் வந்த வேகத்தில் விழுந்துகிடந்த கர்ணன்மேல் விழுந்தது, அந்த ஜீவன். - 'அம்மா! வந்துவிட்டாயா!' என்று வாய் திறந்து கூவினான், கர்ணன். வேதனை நெரிந்த உதடுகளில் புன்னகை குனித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/108&oldid=881443" இலிருந்து மீள்விக்கப்பட்டது