பக்கம்:முல்லை கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கள் எண்முன் கைகட்டி, வாய் பொத்தி நின்றிருக்கின்றார். கள். நீ குற்றவாளியா? நீ குற்றவாளி தானே? என்று அத்தனை பேர்களையும் நான் கேட்டதுண்டு. பலர் இல்லை என்பார்கள். சிலர் ஆம் என் பார்கள். அவனைத் தவிர வேறெவனும் என்மீது குற்றஞ்சாட்டி 'நீர் குற்ற வாளியா - அல்லவா’ என்று என்னைக் கேட்டதில்லை. உலகில் என்போன்று லட்சக்கணக்கான நீதிபதிகள் இருந்: திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். கோடிக்கணக் கான குற்றவாளிகளை அவர்கள் விசாரித்திருப்பார்கள். ஆனால் எனக்கேற்பட்ட அநுபவம் அவர்களில் ஒருவருக் கேனும் ஏற்பட்டிராது. நீண்டு கருத்த முடியை அவன் வாரிக்கட்டியிருந்தான். கட்டிலடங்காத சில ரோமங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ஆனால் அவன் அசையாது நின்றிருந் தான். அவன் நெற்றி அகன்றிருந்தது. புருவங்கள் அடர்ந்: திருந்தன. ஒளி நிறைந்த இரு கண்களால் அவன் இமை கொட்டாது என் முகத்தைப் பார்த்தான். அவனுடைய உயர்ந்த தோள்களையும் அகன்ற மார்பையும் என்னால் மறக்கமுடியவில்லை. அவன் உடலில் சட்டை அணியாம விருந்தான். அவன் மனதிலும், அவன் என்னையோ, அன்று கச்சேரி முழுதும் குழுமியிருந்த ஜனத்திரளையோ சட்டைசெய்ததாகத் தெரியவில்லை. 302 வது பிரிவின்படி நீ கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாய். நீ குற்றவாளியா அல்லவா என்று நான் கேட்டேன். நான் கேட்டதுதான் தாமதம். அவன் தோளை அசைத்து, மார்பை உயர்த்தி, விரிந்த கண்களோடு என்னைப் பார்த்தான். அவனது மீசைகளிரண் டும் துள்ளிக் கூத்தாடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/12&oldid=881457" இலிருந்து மீள்விக்கப்பட்டது