பக்கம்:முல்லை கதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

  • =

که கிருஷ்னக்கோனார். அந்திமதசை யென்றும் அஸ்த மனக்கிரணங்கள் தன்மீது விழுவதைக் கண்டுவிட்டார். அர்த்தமற்ற புதிராக இருந்துவரும் பெரிய மாறுதலின் காலம் அணுகுவதை உணர்த்துவிட்டார். இனி எப் படியோ? இதுவரை நடந்துவந்த வாழ்வுப்பாதை பிறப்பு என்ற சித்தவான் வளையத்தைத் தொடும் அந்த மங்கிய எல்லையிலிருந்து அன்று வரை ஏற்பட்ட மாற்றங்கள், கொந்தளிப்புக்கள், சு ழ ல் க ள் எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கும் அப்பொழுது ஆட்டிய அதிர்ச் சிகன் அற்றுநோக்கும் தன்மையைப் பெற்றார். இன்னும் ஒரு ஆசைமட்டும் பூர்த்தியாகவில்லை. அவனுக்குக் கலியானத்தைச் செய்துவிட்டால், தன் கடமை பரிபூரணமாக நிறைவேறியதாகவே அவர் தீர்மானித்தார். லெட்சுமி என்ற பெண் இசக்கிமுத்துக்கு உடல திர்ச்சி களில் இருக்கும் இன்பத்தைக் காட்ட அவ்வூர்ப் பெரியோர் களால் ஆசீர்வதிக்கப்பட்டாள். பு து க் கு டி த் தன ம் என்னும் பதினெட்டாம் டெருக்கு களிபுரண்டு கொந்தளித் துச் சுழித்து ஓடியது மனக்கனவுகள் என்ற தெப்பம் இசக்கி முத்துக்கு நிலை தடுமாறி குதித்து முழங்கிச் சென்றது. கனவுகள் புதுவடிவம், நிஜவடிவம் பெற்றன, அவன் பாட்டை எழுதுவதை நிறுத்திவிட்டான். நேரில் நிறைவுபெற்ற மனம் பாட்டில் துள்ளிப் பொங்கவில்லை, அவன் கனவுகள் நாதவடிவம் பெறாமல் நாள் மணிக் கணக்கில் நிஜ தரிசனத்தில் ஒடுங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/139&oldid=881479" இலிருந்து மீள்விக்கப்பட்டது