பக்கம்:முல்லை கதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 அவள் அவனைப் பார்த்தாள்; அவளுடைய கெண்டை - விழிகள் ஆடாமல் அசையாமல் இருந்தன. அவள் இவ்வுலகை மறந்தாள். - அவனது சிகை புறக்கழுத்தளவு கத்தரித்து விடப்பட்டி ருந்தது. கதிர்விடும் விரிந்த நெற்றியில் மேலேறிய கறும்புருவம் ஒளி வீசிக் கிடந்தது. அவனுடைய இரண்டு உதடுகளின் கடைக் கூட்டில் உயிர்க்களை பின்னிக் கொண்டிருந்தது. அவனுடைய மார்பும், மார்பிற்கிடந்து ஒளி செய்யும் நவமணிப் பதக்கங்களும் உதயகிரியும் இளம்பரிதியுமாக விளங்கின. - அவள் கண்களில் புதியதோர் ஒளி உண்டாயிற்று. அவள் முகமண்டலம் நிறைய வியப்பு! நெஞ்சில் காதற் பெருக்கு!.அவன் அழகு நிலவையும். கதிரையும் மின்னை யும், பொன்னையும் கொண்டு வல்லமை ஆக்கிய சித்திரமோ என்று ஐயப்பட்டாள், அந்த ஆண்மையின் வடிவில் அறியப்படும் மற்றொரு வீர வடிவம், கேடயத் தோடு வைக்கப்பட்டிருக்கும் நீண்ட வாளாயுதம் என்று உவமித்தாள். அவன் தோற்றம் அவளை உயர்நிலையிற் சேர்த்தது. கண்ட மாத்திரத்தில் அளவற்ற'இன்பத்தை உண்டாக்கும் அவனுடைய திருவுருவமானது. கேட்ட மாத்திரத்தில் இன்பம் விளைக்கும் செந்தமிழ்க்குச் சமம். அவன் திடுக்கிட்டெழுந்தான். அவள் திகைத்தாள். இருவர் பார்வையும், இருவர் மனமும் அமைதி பெற்ற பின் அதிசயத்தோடு நீ யார் தனியாக என்று கேட்டான் நான் கொற்றவேல் மன்னன் மகள். என் பெயர் செல்வி என்று கூறினாள். அவள் கொஞ்சம் நாணத்தால் உடை ஒதுக்கித் தலை குனிந்திருந்தாளா யினும், அந்தக் கட்டழகனின் நல்ல பதிலை எதிர்பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/146&oldid=881487" இலிருந்து மீள்விக்கப்பட்டது