பக்கம்:முல்லை கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 'அவற்றை அங்கே மைதானத்தில் கட்ட டா என்று கர்ஜித்தான் கவுண்டன். ஐயோ பாவம், வெய்யில் மண்டை வெடிக்கிறது. மரத்தடியிலாவது கட்டச் சொல்லுங்கள் என்றேன். 'முடியாது - காளைகள் மீது கருசனையிருந்தால் (கருணையிருந்தால்) என் கடனைக் கொடுத்துவிட்டு, உன் காளைகளைப் பிடித்துப்போ' என்று பதில் கூறினான். காளைகள் கட்டப்பட்ட இடத்திலேயே நான் அன்று மாலைவரை நின்றிருந்தேன். அன்று என் மனைவி பிரசவித்த ஏழாம் நாள் என் வயிறு கடித்தது. காளைகள் வயிறும் குழிந்தது. அவற்றிற்கேனும் கொஞ்சம் புல்லும் தண்ணிரும் கொண்டுவரச் சென்றேன். கொண்டும் வந்தேன். புல்லை உதறிப்போட்டுத் தண்ணிரையும் அருகில் வைத்தேன். கருப்பக்கவுண்டன் ஒடோடியும் வந்தான். தண்ணிரைக் கீழே கவிழ்த்தான். புல்லை வாரித் தூரத்தில் எறிந்தான். உன் காளைமேல் உனக்குள்ள 'கருணை' என் பணத்தின் மேல் உனக்கு இல்லையல்லவா என்று என் முகத்தைப் பார்த்துக் கூறினான். நீங்கள் செய்வது நீதியல்லவே. வாயற்றவனை வதைப்பது நேர்மையல்லவே, என்று அவனோடு வாதாடி னேன். அவன் என்னை வைதான். தன் வலது காலால் என் வயிற்றின்மேல் எட்டி உதைத்தான். நீதி இல்லையா-என்று என் ஆவிதுடிக்கக் கூவினேன் கண்ணிர்விட்டு கதறினேன். கைகள் கூப்பிக் கெஞ்சி னேன் கல்நெஞ்சம் படைத்த கருப்பன் இரங்கவில்லை. அவனை இரங்கச் செய்ய மற்றெவரும் அங்கு அணுக வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/15&oldid=881492" இலிருந்து மீள்விக்கப்பட்டது