பக்கம்:முல்லை கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அதிகாரிகள் இருப்பிடந்தேடி ஒடினேன். அஞ்சலி செய்து வணங்கினேன். அழுதேன். விழுந்தேன். புரண் டேன். புலம்பினேன் என் குறையை அவர்கள் தீர்க்க வில்லை. மீண்டும் என் காளைகள் இருக்குமிடம் ஒடினேன். அவைகளின் கட்டை அவிழ்த்தேன். கருப்பக்கவுண்டன் ஒடிவந்து தடுத்தான். அப்புறம் நடந்ததை ஒரே வார்த்தை யில் முடித்துவிடுகிறேன். அவன் பிணமாக வீழ்ந்தான். தான் கம்பீரத்தோடு என் காளைகளைப் பிடித்துக் கொண்டு என் குடிசைக்கு வந்தேன். ஆண்டவன் படைத்தது இவ்வுலகம்; நான் உழுதுவந்த பத்துப்படி காடும் ஆண்டவனால் படைக்கப்பட்டது. அதில் உழைப்போனாகிய எனக்கில்லாத சொந்தம் கருப்பக்கவுண்டனுக் கெப்படி வந்தது? என் உழைப்பை அவன் திருடினான். நீங்கள் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கவில்லை. என்னையும் என் மூதாதையர்களையும் அவனும் அவனது மூதாதை யரும் இம்சித்து, வஞ்சித்துப் பணம் பிடுங்கி வந்தனர். நீங்கள் அதனைத்தடுத்து நிறுத்தவில்லை. இறுதியில் நான் அவனைக் கொலை செய்யும் நிலைமை ஏற்பட்டதற்கு நீங்களும், உங்கள் பொய்யான சட்டமும் அதிகாரமும் காரணங்களாய் நின்றன. இந்நிலையில் நீங்களதான் குற்றவாளியென நான் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறேன்.நீங்கள் குற்றவாளியா. அல்லவா, சொல்லுங்கள்! அவன் கூறிய காரணங்களையும், என்மீது சாட்டிய குற்றத்தையும் என்னால் மறுக்கமுடியவில்லை. எல்லோ ரும் உழைத்து உண்ணவேண்டும் என்பதே ஆண்டவனின் சட்டம். ஆனால் அச்சட்ட த்தை நிறைவேற்ற நான் நீதிபதியாய் அமர்ந்திருக்கவில்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/16&oldid=881496" இலிருந்து மீள்விக்கப்பட்டது