பக்கம்:முல்லை கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 விட்டால் எப்படியிருக்கும்? - பின்-அரிச்சந்திரன், அந்த சமயத்தியல் சோகம் குலைய மிருதங்கக்காரனைப் பார்த்து உறுமுவது போலிருந்தது, என் நண்பரின் பார்வை, பூரீமான் புரட்சியின் ரசனை கொஞ்சம் கட்டை போலும்: அவர் அசல் கோதுமை சப்பாத்திதான் சார், பஞ்சாபிக்காரன் மாதிரி சாப்பிடுவார் என்றார், பாவம் துரீமான் புரட்சி. சரி! நேரம் சரியில்லை என்று நினைத்துக்கொண்டு, 'உம்மிடம் ரெண்டு ரூபாய் கடன் வாங்கவேண்டும் என்று வந்தேன்; நாளைக்கும் வருவேன். உம்மால் என்னை ஏமாற்றமுடியாது' என்று .ெ சா ல் லி க் .ெ க ா ன் டு வெளியேறினேன்...... உப்பங்காற்று மட்டிலும் வீசும் சமுத்திரக் கரைக்குப் போகும் பொழுதுதான் விஷமத்தனமான என் கசப்பு என்னைவிட்டு அகன்றது. அப்பொழுது அங்கு வந்தான் பூர் பாலு. மெஸர்ஸ் பீபரிவா லாஹ"க்கும் சந்த் அண் சன்ஸ் கம்பெனியின் பல்ஜோமி குமாஸ்தா. கம்பெனியின் காப்பிக்கொட்டைக் கேஸ்களுக்கு ஆணி அடித்து விலாசம் ஒட்டுவது முதல் வரவு சிலவு கணக்குத் தயாரிப்பது, சேட் ஜி மகள் லோனியாவுக்கு வர்ணப்பென்சில் வாங்கிக் கொடுப்பது வரை உள்ள வேலைகள் எல்லாவற்றையும் விரக்தியுடன் செய்யும் அபேதவாதி அவன். என்ன சார் இப்படி உட்கார்ந்திருக்கேள்! ஹி ஹி! போ ைவாரம் நீங்க எழுதின கதை ரொம்ப ஜோர் சார் - வாழ்க்கையின் நுணுக்கங்களை, அப்படியே எழுத் தோவியமாப் பண்ணியிருக்கேன் சார் ஹி..ஹி!' என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவன் அடிக்கடி என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/21&oldid=881501" இலிருந்து மீள்விக்கப்பட்டது