பக்கம்:முல்லை கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அதிகாரிகளோ தங்களைக் குட்டி அரசர்களாக மதித்து வந்தார்கள். அந்த அந்தப் பகுதிக்குள்ளே அவர் கள் இட்டது சட்டம். குறித்த வேளையில்தான் அவர்கள் வந்து வேலை செய்யவேண்டும் என்பதில்லை. ஒருவர் காலை ஐந்து மணிக்கே வந்து எட்டு மணிக்குப் போய் விடுவார்; பிறகு அன்று முழுவதும் தலைகாட்ட மாட்டார். இன்னொருவர் பத்தரை மணிக்கு, எதிரே வரும் ஆட்களை யெல்லாம் மிரட்டிக்கொண்டு ஆர்ப் பாட்டமாய் வருவார். 'ஏய்! மேஜையைத் துடைத்தால் இப்படியா காகிதங்களையெல்லாம் மாற்றிவைக்கிறது? நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை. அந்த மின்சார விசிறியைப் போடுவதற்கென்ன? மரம்போல். நிற்கிறாயே!” என்று வேலைக்காரப் பையனை மிரட்டுவார். பிறகு குமாஸ்தா வருவார், காகிதக் கட்டுகளில் கையெழுத்து வாங்க. "ஒய்? இந்த நிலையத்தில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறீர்கள்?' என்ற கேள்வி பாயும். பன்னி ரண்டு வருஷமாக" என்று அடக்கமாகப் பதில் வரும். ராமராயர் கம்பெனிக்கு உங்களை எத்தனை கோணி மூட்டைகளுக்கு எழுதச் சொன்னேன்?' 'இருநூறு." போமையா போம்! எழுநூறு என்று சொன்னேன், உங்களுக்குக் காது மந்தமென்றால் என்னை மறுபடி கேட்பதற்கென்ன?” "மீதி ஐந்நூறு இன்று வாங்கிக்கொண்டு வரட்டுமா?’’ சே! எவ்வளவு சொன்னாலும் உங்களுக்குப் புரிகிற தில்லை. அந்த படுபாவி நேற்று விலையை உயர்த்தி விட்டான். நீங்கள் போய் என்னத்தை வாங்கிவருவது? பெரிய அசகாயகுரன் போலத்தான் பேச்செல்லாம். இங்கே வேலையில் ஒன்றையும் காணோம்.-சரி. உள்ளே போய்க் கன்னியப்பனைக் கூப்பிடுங்கள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/29&oldid=881521" இலிருந்து மீள்விக்கப்பட்டது