பக்கம்:முல்லை கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 படுத்தது. அவள் தாங்கவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்தது. மாடக்குழியில் தகர விளக்கு புகைமண்டி எரிந்து கொண்டிருந்தது. பக்கிரிசாமி கொஞ்ச நேரம் மல்லாந்து படுத்து இரண்டு கைகளையும் தலைக்கு அண்டை கொடுத்துக் கிடந்தார். மூவரும் படுத்திருந்தனர். சூரியன் - சந்திரன் - பூமி. 麟 線 筠 கடைசியில் பக்கிரிசாமி, பாப்பாத்தி!' என்று மெதுவாகக் கூப்பிட்டார். குரல் கரகரத்திருந்தது. பதில் இல்லை. மீண்டும் சில நிமிஷம் மெளனம். பிறகு 'பாப்பாத்தி' என்ற அதே கரகரப்பு. பதில் வந்தது. வெறும் முனகல். தூக்கக் கலகத்தில் நேர்ந்தது போன்ற ஒரு பா சர்ங்கு. பக்கிரிசாமி வெற்றி கண்டார். பக்கத்தில் கிடந்த இசக்கியம்மாவைத் தூக்கித் தள்ளிப்போட்டு விட்டு, மெதுவாக, பாப்பாத்தி பக்கம் உருண்டார். ஒட்டிப் படுத்தார். பாப்பாத்தியின்தோள் அவர் மார் பைப் பரிசித்தது. 'பாப்பாத்தி!' என்றார். துங்கவில்லை என்று காட்டும் முனகல். '.ாப்பாத்தி - புள்ளெயைப் போட்டு இப்படி அடிச்சா, எனக்குந்தான் கோபம் வராதா?' என்று அருமையாய்க் கேட்டார். அவர்கை அவள் தலைமயிரைக் கோதியது. 'அதுக்கு என்னை இப்படியா அடிக்கது?" என்று பாப்பாத்தி வாயைத் திறந்தாள். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/79&oldid=881631" இலிருந்து மீள்விக்கப்பட்டது