பக்கம்:முல்லை கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதில் சொல்லாமலே கலகலவென்று நகைத்த வண்ணம் மீண்டும் என்னைத் தழுவிக்கொண்டாள். ஆமாம் ரு பிதான்! ஆனால், அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அரை உடம்பாக மெலிந்து...... உணர்ச்சி மேலிட இருவர் கண்களிலும் கண்ணிர் ததும்பியது. சற்று நேரம் மெளனமாகவே உட்கார்ந் திருந்தோம். என் மனம் கடந்த காலத்திற்குத் தாவியது. - அவள் ஒரு கிருஸ்தவப் பெண். அவளைக் கடைசி யாகப் பார்த்தது என் திருமணத்தின்போது. அதுவரை யில் அவளே என் உயிர்த்தோழி குழந்தைப் பருவம் முதல் ஒன்றாகப் படித்தோம் ஒன்றாக விளையாடினோம். வயது வந்த பின்னும் ஒன்றாகவே எங்கள் கனவுக் குதிரையைத் தட்டிவிட்டு, எட்டிய வரையில் பறந்தோம். என் திருமணம் எங்களைப் பிரித்தது. மக்கள் வாழ்க்கை யைக் கல்யாணம் எவ்வளவு பாதித்து விடுகிறது! அதுவும் மகளிர் வாழ்வில்...! மீண்டும் அவளைக் கவனித்தேன். நானறிந்த ரூபி...! அவள் வாளிப்பான உடலா இப்படி வதங்கிய புடலம் பிஞ்சுபோல ... அவள் மின்வெட்டும் விழிகள் சீபகற்காலச் கந்திரனைப்போல ஒளியிழந்து கிடப்பானேன்! அவள் குழிவிழுந்த கன்னமும், உலர்ந்த உதடுகளும், பொலி விழந்த முகமும், அவளுடைய கண்ணாடிக் கன்னத்தையோ எழில் வதனத்தையோ எவ்விதத்திலும் நினைவூட்டாது. காரணம்? இந்த வயசிலேயே ஒரு சோக நாடகத்தை நடித்து முடித்துவிட்டாளா? அதை அறிந்துகொள்ள என் ஆவல் கட்டுக்கடங்காமல் துள்ளியது ஆனால் ... அது அவள் வேதனையைக் கிளறுவதாக இரு ந் த ல்...? இதற்குள் இருவருக்கும் சிற்றுண்டி வந்தது. சாப்பிட்டுக் கொண்டே, "நான் இங்கே வந்து ஒருமாதமாகிறது. நீயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/84&oldid=881643" இலிருந்து மீள்விக்கப்பட்டது