பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

கட்ட முல்லையை நாளும் சீருற்றி வளர்ப்பாள். இரண்டு திங்கள் அம்முல்லைக்கொடி தழைத்து வளர்ந்து அரும்பும். அவளது உள்ளத்திலும் காதல் உணர்வு தழைத்து அரும்பும். அவ்வுணர்வின் எழுச்சியால் பலர் தமக்குரியவனே உள்ளத்தே வரித்துக்கொள்வர். அரும்பிய முல்லை மலர்ந்து கம்மென்று மணம் பரப்பும், மலர்களது மணத்தில் முல்லை மனம் காம உணர்வைக் கெல்லும் வல்லமை கொண்டது. அவள் வளர்த்த கொடியே அவனேக்கெல்வித் துன் புறுத் தி அவளுக்குக் கொடியதாகும். அஃதாவது உள்ளத்தில் உறை பவனின் பிரிவைத் தாங்க இயலாமல் துன்புறுவாள். இப்படித் துன்புற்ற ஒருத்தியைக் கண்ட மற்றெருத்தி பாடினுள் :

  • "எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த

முற்றிழையாள் வாட முறுவலிக்கும் - முற்ற

முடியாப் பரவை முழங்குலகத் தெங்கும் •

கொடியார்க்கும் உண்டோ குணம்" - இவ்வெண்பா முல்லை வளர்த்தவளே அம்முல்லையே துன்புறுத்துவதால் கொடிய செயல் செய்ததாகக் குறித்துக் "கொடியார்" என இரண்டு பொருள்படும்படி உள்ளது. முல்லையை நயத்தோடு சாடுகின்றது. .

இவ்வாறு பருவப் பெண் முல்லைக்கொடியை வளர்க்கும் மரபைக் கடவுளர் மேலும் ஏற்றினர். கொற்றவை இவ்வாறு கொடிகட்டு வளர்த்தாள் என்கிறது. தக்கயாகப்பரணி. இதனே ப் பின்னர் விளங்கக் காணலாம். .

இவ்வாறு மங்கை வளர்த்த கொடியின் மலரைக்கொண்டு காதலன் அவளது தலையில் களவின்போது சூட்டுவான். இது முல்லேச் சூட்டு எனப் பட்டது. களவில்லாமல் பெற்றேர் பார்த்து முடித்த திருமணமானுல் அவள் வளர்த்த முல்லைப்

  • தண்டியலங்காரம் : சிலேடை யின் முடித்தலுக்கு எடுத்துக்காட்டு. . -