பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

மணமகளைக் கண்ட பின்னர் உற்ருர் அளவளாவுவர் மணமகன் வீட்டார் தங்களுக்குள் கலந்துரையாடி முடிவுக்கு. வருவர். விருந்தின் முடிவுதான் திருமண இசை வு, இசைவின்மை பற்றிய கருத்தைத் தெரிவிக்கும் நேரமாகும். பெண் வீட்டாரும் அந்நேரத்தையே எதிர்பார்த்திருப்பர். அம்முடிவை வாய் திறந்து சொல்லமாட்டார். ஏனெனில் இசைவை அறிவிப்பது மகிழ்ச்சிக் குரியதாகும், இசைவின்மையை அறிவிப்பது கண்ணுேட்டமென்னும் நாகரிகம் ஆகாதன்ருே? அதல்ை, குறிப்பாகத் தெரிவிக்க எண்ணினர். அதற்கு ஒரு முறை கைக்கொள்ளப்பட்டது.

விருந்து உண்டு முடிந்து இலேயைவிட்டு எழும் முன்னர் உண்ட இலையை மூடும் பாங்கையே. இதற்குப் பயன் படுத்தினர்.

உண்ட இலையைத் தம்பக்கமாக மூடில்ை மீண்டும் வருவதற்கில்லை - அஃதாவது பெண் பிடிக்க. வில்லை, இசைவில்லை என்பது கருத்தாகும். உண்ட இலையை முன் பக்கமாக மூடில்ை, மீண்டும் வருவோம்; அஃதாவது பெண் பிடித்திருக்கிறது; திருமணத்திற்கு இசைவு என்பது கருத்தாகும். உண்ட இலையை மூடாமல் திறந்தபடியே விட்டால்,

வீட்டாருடன் கலந்துரையாடிப் பின்னர் தெரிவிப்போம்: அஃதாவது இப்போதைக்கு இசைவும் இல்லை; இசைவின்மை. யும் இல்லை என்பது கருத்தாகும். இவ்வாறு குறிப்பாக அறிவிப்பதை மண மகள் வீட்டாரும் குறிப்பால் உணர்ந்து மகிழ்வர்.

28 " குறிப்பில் குறிப்புணர் வாரை, உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்" -எனப் பொதுவிற். கூறப்பட்டதாயினும் ‘யாது கொடுத்தும் பெண் கொள்ளுதற். கும். இது பொருந்துகின்றது.

28 திருக்குறள்: 703