பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

மாந்தரில் இரு பாலாரும் பலவகை அணிகலன்களே அணிகின்றனர். அவற்றுள் சில சில ஒவ்வொரு தகுதி கருதிய அணிகலன்கள் ஆயின.

தலைமுடி அரச பதவிக்குரியது. மார்பில் அணிவது மங்கல அணி, குழந்தைக்கு மார்பிலோ இடுப்பிலோ அணிவது காப்பு அணி. ஆடவரிது ஆற்றலின் அறிகுறி வாகு வளையம் என்னும் தோள் வளை. - ஆடவரது வீரத்தின் அறிகுறி கழல்; இஃதே கொடையின் அறிகுறியும் ஆகும்.

கிறைந்த அணிகலன்கள் மகளிர்க்காகவே தோன்றின; எழுந்தன; வளர்ந்தன; பெருகின. அவை அழகு ஒன்று மட்டும் கருதி அணியப்படுவதில்லை. வெவ்வேறு நலங்கருதி யும், குறியீடு கருதியும் நோக்கம் கருதியும் அணியப்பட்டன

மகளிர்க்குத் தலையணி அழகுப்பொருள்.

காதணியும் மூக்கணியும் ஓரளவு மங்கலப் பொருள்.

கழுத்தணி பெருமளவில் மங்கலப் பொருள்.

கைவளை மங்கலக் காப்பு.

இடையணி உடைக்காப்பு.

காலணிகள் அழகிற்கும், ஓசைக்கும், காப்பிற்கும் பருவத் திற்கும் ஆனவை, அவை: தண்டை, சதங்கை, மணிக்கெச்சை. கால்வுடம், காற்சரி, மெட்டி, பரியகம், பசிபுரம், பாடகம், நூபுரம், சிலம்பு எனப் பல.

இவற்றுள் சிலம்பு ஒரு தனிச்சிறப்புடையது; தனி மதிப் புடையது; இரண்டினும் மேலாகத் தனிகோக்குக் கொண்டது.

சிலம்பு என்பது, வெள்ளி, பொன்னுல் உட்கூடாகச் செய்யப்படுவது. சிறிய ஒலியெழுப்புவதற்காக உள்ளே பரல் பெய்யப்படுவது. உள் பரலாகக் கல், வெள்ளி மணி,