பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பொன்மணி, முத்து, வைரம், மாணிக்கம் முதலியன பெற். யப்படும். பாண்டிமாதேவியின் சிலம்பு முத்துப் பரல் கொண்டது என்பதையும், கண்ணகியாரது சிலம்பு மாணிக்கப் பரல் கொண்டது என்பதையும் சி லப் பதிக ரத் தால் அறிவோம். --

இவ்வணி புறக்காலில் படிந்து கிடக்கும் பாங்கில் இடை குவிந்த வளைவாகச் செய்யப்படும், விரித்து இணக்கும் பொருந்துவாய் கொண்டதாக உருவாக்கப்படும். பத்தி பத்தியான குழிகளில் மணிகள் பதிக்கப்பெற்றிருக்கும். வைரமும் பதிக்கப்படுவதுண்டு. சித்திர வேலேப்பாடுகள் கொண்டது. அவரவரது செல்வ கிலேக்கேற்பச் செய்யப் படும். செல்வநிலையில்லாத எளியோரும் தோலாலும், புல் லாலும், நாராலும் சிலம்பு உருவில் செய்து அணிந்துகொள் வர். சிலம்பை எவ்வகையிலேனும் தம் பெண்ணுக்கு அணி விக்க வேண்டுமென்னும் மரபுடையவராக இருந்தனர்.

சிலம்பு இளம்பெண்ணுக்குரிய அணிகலன்.

30 "சிறுமுது குறைவி சிலம்பார் சீறடி" என்கின்றது அகநானூறு, பெதும்பைப் பருவத்தில் அணியப்பட்டு மங்கைப் பருவத்தை மதிப்பிடுவது. இது குமரிப் பருவத்துக் கன்னியின் சின்னம், -

இறையியல் கோட்பாட்டை விளக்கும் திருமூலர்,

31 "........ குமரி குலக்கன்னி

பாடகச் சீறடி பைம்பொற் சிலம்படி" - எனப் பாடினர். சிலம்பு கன்னிக்குரிய அணிகலனுக இருந்த அடிப்பட்ட பழக்கத்தை அறிந்த திருமூலர் அக்குறிப்பை வாய்ப்பாக்கிக் கையாண்டுள்ளார். - -

30 அகநானூறு: 17: 9 திருமந்திரம்: வயிரவி மந்திரம் : 72 • .